கொழும்பு மாநகர சபையின் பெண் உறுப்பினர் கைது! (திருத்தம்)

சுங்க சட்டத்தை மீறி, வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட உதிரிப்பாகங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட வாகனத்தை வைத்திருந்த குற்றச்சாட்டில் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரான பெண் ஒருவர் விசேட அதிரடி பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு மாநகர சபையின் ஜனநாயக முக்கள் முன்னணி உறுப்பினர் மார்க்ரட் ஹில்டா சில்வாவே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

விசேட அதிரடிப் படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது கொழும்பு – 13 பகுதியிலுள்ள அவரது வீட்டில் வைத்து 56 வயதான குறித்த பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

அத்துடன், சந்தேகநபரிடம் வாகனத்துக்கான எந்தவொரு சட்டபூர்வமான ஆவணங்களும் இருக்கவில்லை என்றும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.