100 ஆண்டுகளில் மிக மோசமானது: பிரதமர் மோடி தகவல்!

ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமையன்றும் நாட்டு மக்களிடையே மான் கி பாத் எனும் வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். அந்த வகையில், இந்த மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமையான இன்று வானொலி நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, நமது நாடு, கொரோனா தொற்றை எதிர்த்து வலிமையுடன் போராடி வருகிறது. கடந்த 100 ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப்பெரிய பெருந்தொற்றாக கொரோனா உள்ளது. அதேநேரத்தில், இயற்கை பேரிடர்களையும் இந்தியா எதிர்கொண்டு உள்ளது.

அம்பான் புயல், நிசார்க் புயலையும் எதிர்கொண்டோம்; பல மாநிலங்களில் வெள்ளம் ஏற்பட்டது. சிறிய நில நடுக்கமும் உண்டானது; நிலச்சரிவும் வந்தது. பெருந்தோற்று காலத்திலும் இயற்கை பேரிடரை மிக வெற்றிகரமாக இந்தியா சமாளித்துள்ளது. எவ்வளவு பிரச்னைகள் வந்தாலும், உறுதியுடன் அதனை சமாளிப்போம் என்பது நிரூபணம் ஆகி உள்ளது” என்றார்.

புயல், மழை காலங்களில் துணிச்சலோடு மீட்பு பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்ற பிரதமர் மோடி, கடந்த 10 நாளில் இந்தியா இரண்டு புயல்களை சந்தித்தது. டக்டே புயல் கிழக்கு கடற்கரையையும், யாஸ் புயல் மேற்கு கடற்கரையையும் தாக்கியது. இதில் பல மாநிலங்கள் பாதிக்கப்பட்டன. நாடும், மக்களும், வலிமையுடன் புயலை எதிர்த்து போராடி, உயிரிழப்பை குறைத்தனர் என்றார்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

மருத்துவர்கள் செவிலியர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள் தன்னலமற்ற வகையில் இரவு பகலாக மக்களுக்கு சேவையாற்றி வருகின்றனர் என பாராட்டிய பிரதமர், கொரோனா இரண்டாது அலையை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்த இவர்களின் முழு பணியும், ஒத்துழைப்பும் பெரும் உதவியாக இருக்கிறது. அதேநேரத்தில், இந்த கொரோனா இரண்டாவது அலையின் போது மக்களுக்கு உதவுவதில் இன்னும் சிலர் முன்கள பணியாளர்களாக பணியாற்றி உள்ளனர். அவர்கள் குறித்து குறிப்பிட வேண்டும் என மக்கள் என்னிடம் கூறியுள்ளனர். அவர்களுக்கும் எனது நன்றி என்றார்.

இரண்டாவது அலை இந்தியாவை தாக்கிய போது, ஆக்ஸிஜன் தேவை அதிகளவு அதிகரித்து பெரிய சவாலாக மாறியது. வெகு தூரத்தில் உள்ள இடங்களுக்கு ஆக்ஸிஜன் வழங்குவது பெரிய சவாலாக இருந்தது. தற்போது நாள் ஒன்றுக்கு 9,500 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது. இது 10 மடங்கு உயர்வு என்றும் பிரதமர் மோடி தகவல் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.