2022ஆம் ஆண்டில் தரம் 1 அனுமதிக்கான விண்ணப்பம் கோரல்!

2022ஆம் ஆண்டில் அரச பாடசாலைகளில் தரம் ஒன்றுக்குப் பிள்ளைகளை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் கல்வி அமைச்சால் கோரப்பட்டுள்ளன.

முறையாகப் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஜுன் 30 ஆம் திகதிக்கு முன்னர் அந்தந்தப் பாடசாலைகளின் அதிபர்களுக்கு பதிவுத் தபாலில் அனுப்பி வைக்குமாறு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

2022ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் திகதியில் 5 வயதைப் பூர்தி செய்யும் பிள்ளைகள் பாடசாலைகளுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இதன்படி அனைத்து விண்ணப்பதாரிகளும் தமது வீடுகளுக்கு அருகில் உள்ள மூன்று மாகாணப் பாடசாலைகள் உள்ளிட்ட 6 பாடசாலைகளுக்காவது விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும் என்றும், தகுதியுடைய பாடசாலைக்கு பிள்ளை அனுமதிக்கப்படும் என்றும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.