யாழில் குளவிக்கொட்டுக்கு இலக்கனான மூவர் மயக்கம்.

யாழ்ப்பாணத்தில் ஆலயம் ஒன்றில் சிரமதானப் பணியில் ஈடுபட்டிருந்த மூவர் குளவிக்கொட்டுக்கு இலக்காகி மயக்கமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நாவற்குழிப் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் இன்று சிரமதானப் பணியில் சிலர் ஈடுபட்டிருந்தபோது, குளவிக் கூடு கலைந்து சிரமதானப் பணியில் ஈடுபட்டிருந்தவர்களைத் துரத்திக் கொட்டியது.

அதில் மூவர் மயக்கமடைந்த நிலையில் அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.