கொழும்பில் பிரபல ஹோட்டல் முகாமைத்துவத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை.

சங்ரிலா ஹோட்டல் முகாமைத்துவத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நாட்டில் பயணத் தடை அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நேற்றைய தினம் பிறந்தநாள் விருந்துபசாரமொன்றை நடாத்த அனுமதி வழங்கியமை தொடர்பில் இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி விருந்துபசாரத்தை ஏற்பாடு செய்த பிரபல சிகை அலங்கார கலைஞர் சந்திமால் ஜயசிங்க மற்றும் மாடல் அழகி பியூமி ஹன்சமாலி ஆகியோர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இந்த விருந்துபசார நிகழ்வில் குறைந்தபட்சம் 25 பேர் பங்கேற்றிருந்தனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. நிகழ்வில் பங்கேற்றவர்கள் குறித்து சீ.சீ.ரீ.வி காணொளி மூலம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.