இலங்கை சினிமாத்துறை பிரபலமான கே.குணரத்னத்தின் புதல்வரான G.R. பத்மராஜ் காலமானார்

இலங்கையின் சினிமாத்துறைக்கு அளப்பரிய சேவையாற்றியவர்களில் ஒருவரான பிரபல தொழிலதிபர் G.R. பத்மராஜ் தனது 69 ஆவது அகவையில் காலமானார்.

இலங்கையின் சினிமாத்துறைக்கு அளப்பரிய சேவையாற்றியவர்களில் ஒருவரான பிரபல தொழிலதிபர் G.R. பத்மராஜ் தனது 69 ஆவது அகவையில் காலமானார்.

இலங்கையின் புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பாளர்களில் ஒருவரான கே.குணரத்னத்தின் புதல்வரான குணரத்னம் ரபிந்திரநாத் பத்மராஜ் 1951 ஆம் ஆண்டு கொழும்பில் பிறந்தார்.

கல்கிசை சென். தோமஸ் கல்லூரியின் பழைய மாணவரான பத்மராஜ் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.

அன்னார், சினிமாஸ் லிமிட்டட், சினிமா என்டர்டெய்ன்மன்ட் பிரைவட் லிமிட்டட், கே.ஜி. குரூப் ஒவ் கம்பனீஸ் ஆகிய நிறுவனங்களின் முகாமைத்துவ பணிப்பாளரும் பிரபல தொழிலதிபருமாவார்.

பிரபல திரையரங்குகள் பலவற்றின் உரிமையாளரானG.R.பத்மராஜ், தனது தந்தையாரின் வழியில் பல சிங்கள திரைப்படங்களை தயாரித்துள்ளதுடன், கோமாளி கிங்ஸ் தமிழ் திரைப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராகவும் திகழ்ந்தார்.

திரைப்பட இறக்குமதியாளராகவும் விநியோகத்தராகவும் இலங்கையின் சினிமா ரசிகர்களுக்கு சேவையாற்றிய அன்னார், திரைப்படத்துறையின் மேம்பாட்டிற்காக முன்னின்று செயற்பட்டவராக துறைசார்ந்தவர்கள் மத்தியில் பிரபல்யமடைந்திருந்தார்.

சுகயீனமுற்றிருந்த அன்னார், சென்னையிலுள்ள மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் காலமானார்

Leave A Reply

Your email address will not be published.