ஊரடங்கில் 1,200 கி.மீ வரை சைக்கிள் மிதித்த சிறுமியின் தந்தை மரணம்..!

கடந்த ஊரடங்கில் 1200 கி.மீ வரை சைக்கிளில் பயணித்த சிறுமியின் தந்தை உயிரிழந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஊரடங்கின்போது டெல்லியில் இருந்து பிகார் வரை தனது தந்தையை சைக்கிளில் அழைத்து வந்த சிறுமி உலகளவில் பாராட்டுகளை பெற்றார். இந்நிலையில் அவரது தந்தை மோகன் பாஸ்வான் இன்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

20,000 பேருக்கு மேல இப்போ என்ன பண்ணிட்டு இருக்காங்க தெரியுமா? நீங்களே பாருங்க
பிகாரைச் சேர்ந்த மோகன் பாஸ்வான் டெல்லியில் உள்ள குர்கான் நகரில் சைக்கிள் ரிக்ஷா ஓட்டி பிழந்தப்பை நடத்தி வந்துள்ளார். கடந்த வருட பொதுமுடக்கம் காரணமாக தொழில் தற்காலிகமாக தடை செய்யப்பட்டதால் வருமானம் இழந்த அவர் சில நாட்கள் அங்கு காலத்தை ஓட்டி வந்தார்.

பின்னர், சொந்த ஊரான பீகாருக்கே சென்று விடலாம் என்று நினைத்தபோது, போதிய காசு இல்லாததால் லாரியில் கூட அவர்களை ஏற்றவில்லை. இந்நிலையில், தந்தை மோகன் பாஸ்வானை சைக்கிளில் அமரவைத்துக்கொண்ட மகள் ஜோதி குமாரி (15), அங்கிருந்து 1200 கி.மீ சைக்கிளை மிதித்து 7 நாட்கள் பயணத்துக்கு பிறகு சொந்த ஊரான தர்பங்கா மாவட்டத்துக்கு வந்து சேர்ந்தார்.

இந்த சம்பவம் இந்தியா முழுக்க பரவி, ஜோதி கட்டுக்கடங்கா பாராட்டுகளை பெற்றார். மேலும் , தேசிய அளவிலான சைக்கிள் பந்தயத்துக்கு ஜோதியை தயார்படுத்தும் நோக்கில் பயிற்சி அளிக்க அவருக்கு இந்திய சைக்கிள் பந்தய கூட்டமைப்பு அழைப்பு விடுத்தது. மேலும், இந்த சம்பவம் அறிந்து அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்பின் மகள் இவாங்கா ட்ரம்ப் சிறுமியை ட்விட்டரில் பாராட்டியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

சிறுமியின் தந்தை உயிரிழந்ததையடுத்து மாவட்ட நிர்வாகம் உரிய உதவிகளை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

Leave A Reply

Your email address will not be published.