கொரோனாத் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்க யாழ். போதனாவில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவு மேலும் விரிவாக்கல்!

கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்லுவதால், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவு மேலும் விரிவாக்கப்பட்டுள்ளது. இதுவரை 4 கட்டில்களுடன் இயங்கி வந்த அதிதீவிர சிகிச்சைப் பிரிவு தற்போது 10 கட்டில்களுடன் இயங்க ஆரம்பித்துள்ளது.

கொரோனாத் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இரண்டு விடுதிகள் இயங்கி வருகின்றன. அவை முழுமையாக நிரம்பியுள்ளன. அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கு இதுவரை 4 கட்டில்களே இருந்தன.

நோயாளிகள் அதிகரித்தால் சிகிச்சையளிப்பதற்கு ஏற்ற வகையில் அதன் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

தற்போது இரண்டு தொற்றாளர்கள் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.