கந்தக்காடு புனர்வாழ்வு முகாமில் கொரோனா தொற்று எண்ணிக்கை 492ஆக உயர்வடைந்துள்ளது

கந்தக்காடு புனர்வாழ்வு முகாமில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 492ஆக உயர்வடைந்துள்ளது.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனை மூலம் அது உறுதியாகியுள்ளதென இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு மத்திய நிலையத்தில் இன்று 15ம் திகதி இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இராணுவ தளபதி இவ்வாறு தெரிவித்தார்.

இதில் 429 பேர் புனர்வாழ்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டவர்கள் எனவும் 47 பேர் குறித்த கந்தக்காடு மத்திய நிலையத்தில் பணியாற்றியவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இவர்களுடன் பழகிய 16 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.