அத்தியாவசிய சேவைகளுக்காக பயணிப்பதற்கு நாளை முதல் விஷேட 11 ஸ்டிகர்கள் அறிமுகம்.

பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள வேலையில் அத்தியாவசிய சேவைகளுக்காக பயணிப்பதற்கு நாளை முதல் விஷேட 11 ஸ்டிகர்கள் அறிமுகப்படுத்தவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இன்று (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் பச்சை நிறம் சுகாதார பிரிவினருக்கும், இளம் நீல நிறம் முப்படை மற்றும் பொலிஸாருக்கும் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் ஊதா நிறம் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பேருக்கும், இளம் பழுப்பு நிறம் இறக்குமதி, ஏற்றுமதி, உற்பத்தி மற்றும் தொழிற்சாலை துறைகளைச் சேர்ந்தவர்களுக்கும், மஞ்சள் நிறம் அத்தியவசிய பொருட்கள் விநியோகத்திற்கும் வழங்கப்படவுள்ளது.

மேலும் செம்மஞ்சள் நிறம் ஊடக துறையினருக்கும், வௌ்ளை நிறம் வௌிநாடுகளுக்கு செல்ல பயணிப்போருக்கும், கருப்பு நிறம் இறுதி சடங்கு, மருத்துவ பரிசோதனை போன்றவற்றிற்கும் சாம்பல் நிறம் உணவுகளை விநியோகிப்பதற்கும் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

அதன்படி 11 துறைகளுக்கு வெவ்வேறு வண்ணங்களின் கீழ் ஸ்டிக்கர்கள் வழங்கப்படும்.

Leave A Reply

Your email address will not be published.