அம்பாறை பொலிஸ் நிலைய சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி கைது

உயிர்த்தஞாயிறு சம்பவத்துடன் தொடர்புடைய சாய்ந்தமருது குண்டுவெடிப்பு சாட்சியங்களை மறைத்துள்ளமை காரணமாக அம்பாறை பொலிஸ் நிலைய சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவினால் குறித்த பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

உயிர்த்தஞாயிறு சம்பவத்துடன் தொடர்புடைய விசாரணைகள் மும்முரமாக நடைபெற்ற வருகின்ற நிலையில் அம்பாறை பொலிஸ் நிலைய சிரேஷ்டபொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.