யாழ் போதனா வைத்தியசாலையில் நடாத்தபட்ட பரிசோதனையில் இருவருக்கு கொரோனா

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் முழங்காவில் தனிமைப்படுத்தல் நிலையத்தைச் சேர்ந்த பாதுகாப்பு படையினர் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த தகவலை யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் 125பேருக்கான பரிசோதனைகள் யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் மருத்துவபீட ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்டன.

இதேவேளை நேற்று நடத்தப்பட்ட பரிசோதனையில் பம்பைமடு தனிமைப்படுத்தல் நிலையத்தைச் சேர்ந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.