கோவின் இணையதளத்தில் தமிழ் மொழி சேர்ப்பு

கொரோனா தடுப்பூசிக்கான முன்பதிவு செய்யும் கோவின் இணையதளத்தில் தமிழ் மொழி சேர்க்கப்பட்டுள்ளது.

கோவின் இணையதளத்தில் ஹிந்தி, மராத்தி, குஜராத்தி உள்ளிட்ட மாநில மொழிகள் சேர்க்கப்பட்ட நிலையில், தமிழ் மொழி சேர்க்கப்படமால் இருந்தது.

இதையடுத்து மாநில மொழிகள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், தமிழ் மொழி சேர்க்கப்படாமல் இருந்ததற்கு பல தரப்பில் இருந்தும் கண்டனம் எழுந்தது.

இந்நிலையில், கோவின் இணையதளத்தில் தமிழ் மொழி சேர்க்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசிக்கான முன்பதிவு செய்யும் இணையத்தில் செம்மொழியான தமிழ் 12 -ஆவது மொழியாக சேர்க்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.