நண்பர்களுடன் குளிக்கச் சென்ற மாணவன் கடலில் மூழ்கி மரணம்.

மாணவன் கடலில் மூழ்கி மரணம்- நண்பர்களுடன் குளிக்கச் சென்ற போது
கல்முனையில் இடம்பெற்ற விபரீதம்.

நண்பர்களுடன் கடலில் குளிக்கச்சென்ற மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கல்முனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் உள்ள கடலில் நேற்று (8) மாலை நண்பர்களுடன் நீராடச் சென்ற மாணவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட மாணவன் கல்முனை கார்மேல் பாத்திமா கல்லூரியில் உயர்தரம் தொழிநுட்ப பிரிவில் கல்வி பயிலும் நேசமணி அக்ஸயன் (வயது 17) ஆவார்.

இவர் நண்பர்களுடன் கூட்டாக இணைந்து மாலை கடலில் குளித்து கொண்டிருந்த போதே சம்பவம் நடைபெற்றுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தற்போது கொரோனா அனர்த்தங்களினால் பயணக்கட்டுப்பாடு நடைமுறையில் உள்ள நிலையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதுடன் இறந்த மாணவனின் தாயார் ஆசிரியர் என்பதுடன் தந்தையார் தச்சு வேலை செய்பவர் எனவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கல்முனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.