தமிழகத்தில் ஊரடங்கு நீக்கப்பட்டதா? பதறவிடும் மக்கள் கூட்டம் – அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் உணவு, தண்ணீர் இன்றி விலங்குகள் ஆதரவற்ற நிலையில் இருக்கின்றன. எனவே இவற்றுக்கு உணவு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் சிவா என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையில், சாதாரண நேரங்களிலும் விலங்குகளை மனிதாபிமானத்துடன், அறிவியல் பூர்வமாக அணுக கால்நடைத்துறை திட்டம் வகுக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது.

மேலும் ஊரடங்கு முழுமையாக நீக்கப்பட்டது போல் பொது மக்களின் நடமாட்டம் உள்ளது. ஊரடங்கு நீக்கப்படவில்லை என்பதை மக்கள் உணர வேண்டும். பொதுமக்களுக்கு சுய கட்டுப்பாட்டை கற்பிக்க வேண்டும் என்று அட்வகேட் ஜெனரல் சண்முக சுந்தரத்திடம் தலைமை நீதிபதி தெரிவித்தார். அதற்கு, முதலில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போது பொதுமக்களிடம் போலீசார் கடுமையாக நடந்து கொண்டனர்.

அவ்வாறு நடக்கக் கூடாது. இ-பதிவு வைத்திருக்கிறார்களா எனப் பார்த்து அனுப்ப வேண்டும். மென்மையாக அணுகுமுறையை கடைபிடிக்க போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டது என்று அட்வகேட் ஜெனரல் பதிலளித்தார். இதையடுத்து பேசிய தலைமை நீதிபதி, இதனை அரசியல் பிரச்சினையாக்க வேண்டாம். கோவை உள்ளிட்ட நகரங்களில் வெளியில் வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

கொரோனா ஊரடங்கு முடிந்துவிட்டதாக மக்கள் நினைக்கின்றனர். நாங்கள் தான் கட்டுப்பாடுகளை பேணி வழக்கு விசாரணையை நடத்துகிறோம் என்றார். அதற்கு அட்வகேட் ஜெனரல், கடைகள் திறக்கப்பட்டதால் பொதுமக்கள் கூடுகின்றனர் என்று கூறினார். உடனே தலைமை நீதிபதி, ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

மக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை குறைக்கவே தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. வெளியில் சுற்றுவதற்கு அல்ல. கூட்டம் கூடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். இதனை தமிழக அரசு தரப்பிற்கு எடுத்துச் செல்வதாக அட்வகேட் ஜெனரல் சண்முக சுந்தரம் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.