இரகசியமான முறையில் தடுப்பூசி: இரு அரச அதிகாரிகள் பணி மாற்றம்!

தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களை மீறி மேல் மாகாணத்திலிருந்து காலிக்குச் சென்ற ஒரு குழுவுக்கு இரகசியமான முறையில் ‘அஸ்ட்ரா செனெகா’ தடுப்பூசி வழங்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இரு அரச அதிகாரிகள் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

காலி மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரியந்த ஜீவரத்ன மற்றும் காலி பிராந்திய தொற்று நோயியல் பிரிவின் அதிகாரி வேணுர குமார சிங்காரச்சி ஆகிய இருவருமே இவ்வாறு உடனடியாகப் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் சோதனைப் பிரிவின் அதிகாரிகளால் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும், சம்பவம் குறித்து ஒழுக்காற்று விசாரணை நடத்தப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களை மீறி மேல் மாகாணத்திலிருந்து காலிக்குச் சென்ற ஒரு குழுவுக்கு ‘அஸ்ட்ரா செனெகா’ தடுப்பூசி இரகசியமாக வழங்கப்பட்டமை தொடர்பில் ஊடகங்களில் செய்திகள் கசிந்ததையடுத்து இது குறித்து சுகாதார அமைச்சு விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.