தம்பி பிரபாகரன் என கூற விக்னேஸ்வரனுக்கு அருகதையில்லை – விடுதலைப் புலிகள் மக்கள் பேரவை

தானும் தமிழ் தலைவன் என காட்டுவதற்காக முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தம்பி பிரபாகரன் என்று கூறுகின்றார். உன்மையில் தம்பி பிரபாகரன் என கூறுவதற்கு விக்னேஸ்வரன் அருகதையற்றவர் என விடுதலைப் புலிகள் மக்கள் பேரவையின் பொதுச் செயலாளர் கண்ணன் தெரிவித்தார்.

இன்று யாழ் ஊடக மன்றத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்

தமிழ் மக்கள் தமது வாக்குகளை முன்னாள் போராளிகளாகிய எங்களுக்கு வழங்க வேண்டும். களத்தில் போராடிய போராளிகளுக்கு அரசியல் மேற்கொள்ளவும் தெரியும் அதனால் மக்கள் முன்னாள் போராளிகளுக்கு வாக்களிக்கவும்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு முன்னாள் போராளிகளை தங்களோடு ஒன்றினையுமாறு கோருகின்றார். அனைத்து கட்சிகளும் முன்னாள் போராளிகளை கருவேப்பிலையாக பயண்படுத்துகின்றனர்.

தமிழ் கைதிகளின் வழக்குகளில் நீதியரசராக இருந்து கொண்டு உட்சபட்ட தண்டனைகளை வழங்கிய முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தற்போது தம்பி பிரபாகரன் என்கிறார். தம்பி பிரபாகரன் என கூறுவதற்கு அவர் அருகதையற்றவர், என்றார்.

Comments are closed.