நயினாதீவு நாகபூசனி அம்மன் கோவில் வரலாறு.

யாழ்பாணம் : ஆககுறைந்தது கடந்த சில ஆயிரம் ஆண்டுகளாவது அவை அமைந்துள்ள சூழலில் நிகழ்ந்த வரலாற்று நிகழ்வுகளின் விளைவான எழுச்சி வீழ்ச்சிகளையெல்லாம் தாங்கி தலைநிமிர்ந்து நிற்கும் உலகவழிபாட்டு தலங்கள் சிலவற்றுள் இக்கோவிலும் ஒன்றாகும் சில யிரம் ஆண்டுகளிற்கு முன்னதாக இது நாகர் இன மக்களால் தோற்றிவிக்கப்பட்டதாகவே வரலாறு சொல்கின்றது .

நாகர் எனப்படுபவர் சரித்திரகாலத்திற்கு முற்பட்ட பெரும்பாலும் திராவிடர்கள்என்போராக இருந்திருக்கக்கூடிய தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் பரந்துவாழ்ந்த இனத்தவரில் ஒரு கிளையினர் என சேர்.பொன். அருணாச்சலம் அவர்கள் கூறியுள்ளார்கள்.

நாகவழிபாடும் நாகம்மாள் வழிபாடும்

(02) இவ்வாலயம் ஆனது முதலில் நாகத்தை தெய்வமாக வழிபடுவதற்கென்றே தோற்றிவிக்கப்பட்டது .நாகதேவன்” தமிழர்களால் ” நாக- நயினார் என்றும் : நயினார் என்றும் அகை்கப்பட்டான் அதனாலேயே இக்கோவில் அமைந்த தீவு நயினார் தீவு” என அழைக்கப்படலாயிற்று கால ஓட்டத்தில் அப்பெயரானது நயினாதீவு என சிதைந்துள்ளது.

தமிழகத்தில் இராமநாதபுரமாவட்டத்தில் நயினார் கோவில் என்ற பழமையும் பெருமையும் வாய்ந்த நகரம் ஒன்று உண்டு.இங்குள்ள நாகநாத சுவாமி கோவில் மிகவும் பழமைவாய்ந்த கோவில் ஒனறெனவும் இங்குள்ள இறைவனும் இறைவியும் பல அற்புதங்களை நிகழ்த்தியதாகவும் இக்கோவில் வரலாறு எடுத்துக் கூறகின்றது.

இன்றும் அக்கோவிலின் பழைய பெயர் ஊரின்பெயராக நிலைத்து நின்றாலும் கோவிலில் எழுத்தருளி இருக்கும் இறைவன் நாக நாத சுவா சுவாமி ன வடமொழிப்பெயர் இடப்பட்டு கோவில் சிவன் கோவிலாகமாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இ்வ்வாறே ஆயிரம் ஆண்டுகளிற்கு முன்னர்நாகதேவனுக்கு ஆலயம் அமைக்கப்பட்டு அதனால் தமிதமிழில் “நயினார் தீவு; பெயர் சூடிக்கொண்ட எமது தீவில் இன்று உள்ள கோவில்
“ஸ்ரீநாகபூசனி அம்மன் கோவில்” ஆக காலப்போக்கில் மாற்றம் பெற்றிருந்தாலும் இன்னமும் ஊரின் பெயரில் நாகதேவனாகிய ” நயினார்” தொடர்ந்தும் நிலைத்திருப்பதோடு கோவிலின் கருவறையிலும் அவரே முக்கியஇடத்தை வகிக்கிறார்.

என்பது குறிப்பிடத்தக்கது
இக்கோவில் கருவறைக்குள் இன்னதென்று அடையாளம் காணமுடியாத மற்றொரு சிலையும் மட்டுமே உள்ளன அம்மன் சிலையென அடையாளம் காணக்கூடிய எதுவுமே கருவறைக்குள் இல்லை ஆயினும்
சைவமக்கள் நெஞ்சில் கருவறைக்குள் இருப்பது நஞினாதீவு நாகபூசனி அம்மன் தான் என்பது இறுக்கமாக பலநூற்றாண்டுகாக நிலைத்துவிட்ட நம்பிக்கையாகும் ‘தெய்வம் என்றால் அதுதெய்வம் ” வெறும் சிலையென்றால் அது சிலைதான் ” அன்றோமக்களின் நம்பிக்கையே மற்றெல்லாவற்ரையும் விடமுக்கியமானது என்பதில் ஜயமில்லை.

நயினாதீவில் வதியும் தொல் தமிழர்.வள்ளுவர் சமூகத்தைக் குறிக்கின்றது
மத்தியில் ஒரு தொன்மையான வழக்கம் இயன்றளவும் நிலைத்துள்ளது அவர்கள் மதிப்புத்தரவேண்டிய ஆண்களை ”
நயினார் ” என்றும் அத்தகைய பெண்களை நாச்சியார்” என்றும் அழைப்பதே அந்த வழக்கம். நயினார்(நாகதேவன்) வழிபாட்டை கடைசிவரை பிடிவாதமாக காத்தவர்கள் காத்தவர்கள் இவர்கள் தான் என்பதை இவ்வளக்கம் எடுத்துக்காட்டுகின்றது.
” நாச்சியார்” என்பது நாக ஆச்சியார்”என்பதன் என்பதன் மருஉ ஆகும் வள்ளுவ சமுதாய மக்களே நயினாதீவின் முதற்குடியினர் ஆவார்கள் (Aborigines of Nainativu) இவர்கள் நாகர் வழிவந்த தொல்தமிழர்கள் ஆவார்கள் இங்கு பிற்காலத்தில் நயினார்பூசைக்காக இந்தியாவிலிருந்து வந்த பட்டர்கள் அமர்த்தப்பட்டார்களே அல்லர் தமிழகத்தில் சிலநூற்றாண்டுகளாவது வாழ்ந்த பிராமணக்குடிகளை சேர்ந்த பிராமணர்கள் ஜயர் அல்லது குருக்கள் என்றே அழைக்கப்பட்டனர். மாறாக பட்டர்கள் என அழைக்கப்பட்டோர் காஸ்மீரின் பட்டர் பிராந்தியத்தில்( padder region) முஸ்லீம்களின் தொடர் படையெடுப்பாலலும் காஸ்மீர் தேச அரசன் முஸ்லீமாக மதம்மாறியன் விழைவாகவும் பிந்தியகாலத்தில் கன்னட நாட்டிலுள்ள மங்களூர் பிரதேசத்திற்கு இடம்பெயர்ந்த வட நாட்டோர் ஆவர்
நயினார்” பூசைக்காக “நயினார் “தீவுக்கு “வந்த பட்டர் நயினார் பட்டர் என அழைக்கப்பட்டிருக்கலாம். இதை மறத்த நயினார் பட்டர் என்ற பிரதேசப்பிராமணர் வாழ்ந்த தாலேயே எமது திவுக்கு நயினாதீவு என பெயரிடப்பட்டுள்ளது. நாக வழிபாட்டுக்கு சொந்தக்காறர் வள்ளுவ சமூகத்தினரே சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளின் முன்னரே மணிமேகலை நயினாதீவுக்கு வந்ததாக கருதப்படும் காலத்தில் பௌத்தம் சங்கமித்திருந்த நிலை இத்தீவுக்கு இருந்திருக்கலாம்.

Leave A Reply

Your email address will not be published.