இத்தாலி மனிதநேய அமைப்பின் பணி காலத்தின் தேவை கருதிய கனதியான பணி – சி.சிறீதரன் எம்.பி!

முல்லைத்தீவு: உலகப்பந்தில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் உறவுகளின் தன்னலம் கருதா மனிதாபிமானப் பணிகளே, தமது இருப்பைத் தக்கவைக்க எல்லா வழிகளிலும் போராடும் நிலையிலுள்ள ஈழத்தமிழர்களுக்கு என்றும் உறுதுணையாய் இருந்து வருகிறது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இத்தாலி மனிதநேய அமைப்பின் நிதியுதவியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நிரந்தர வீட்டினை கையளிக்கும் நிகழ்வின் போதே பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்…

காலத்தின் தேவையறிந்து சேவையாற்றும் இத்தாலி மனிதநேய அமைப்பு உள்ளிட்ட தன்னார்வ அமைப்புக்களின் உதவிகள் தான் போராலும், இயற்கைப் பேரிடர்களாலும், கொரோனா பெருந்தொற்றாலும் தொடர் பாதிப்புக்களை எதிர்கொள்ளும் எமது மக்களை ஆற்றுப்படுத்துவதாக அமைந்துள்ளன என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இத்தாலி மனிதநேய அமைப்பின் ஸ்தாபகர் மகேஸ்வரநாதன் கிருபாகரனின் வழிகாட்டுதலில், சுவிஸ் நாட்டில் வசிக்கும் நல்லையா பாஸ்கரன் என்பவரின் 50வது பிறந்த நாளை முன்னிட்டு, 10ம் வட்டாரம், புதிய குடியிருப்பு, புதுக்குடியிருப்பில் வாழும் பெண் தலைமைத்துவக் குடும்பம் ஒன்றின் நிலைகருதி ஆறு இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட நிரந்தர வீட்டினை பயனாளியிடம் கையளிக்கும் நிகழ்வு இத்தாலி மனிதநேய அமைப்பின் இலங்கைக்கான தலைவர் சிவலிங்கம் புஸ்பகாந்தான் தலைமையில் சுகாதார விதிமுறைகளுக்கமைய நடைபெற்றது.

Leave A Reply

Your email address will not be published.