இடைத்தங்கல் பராமரிப்பு நிலையம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

யாழ் மாவட்டத்திற்கு செயலகத்திற்கு சொந்தமான நெல் களஞ்சியத்தில் தற்போது யாழ் மாவட்டத்தில் அதிகரித்துவரும் கொரோனா தொற்றாளர்களை பராமரிக்கவென 200 கட்டிகளுடன் தயார்படுத்தப்பட்டுள்ள குறித்த இடைத்தங்கல் பராமரிப்பு நிலையமானது இன்றைய தினம் யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி ,அரச அதிபரினால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது

குறித்த நிகழ்வில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்கஅதிபர் வடக்கு மாகாண சுகாதார திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மாவட்ட கட்டளைத்தளபதி

யாழ் மாவட்ட மக்களின் செயற்பாடுகளாலேயே யாழில் தொற்று அதிகரித்ததாக யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா தெரிவித்தார்

இன்றைய தினம் யாழ்ப்பாணம் நாவற்குழி கொரோனா இடைத்தங்கல் சிகிச்சை நிலையத்தினை திறந்து வைத்தபின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த காலத்தை விட தற்பொழுது தொற்றுஅதிகரிக்கும் நிலை காணப்படுகின்றது யாழ்ப்பாண மாவட்டத்திலே சில ஆலயங்களில் சுகாதார பிரிவினரின் கட்டுப்பாடுகளை மீறி ஆலய உட்சவங்கள் நடத்தப்பட்டமையாலேயே தொற்றுநிலைமை அதிகரித்தது

தற்போதும் சில இடங்களில் திருமண நிகழ்வுகள் வீடுகளில் சுகாதார பிரிவின் அனுமதி இல்லாமல் மேற்கொள்ளப்படுகின்றது எனவே மக்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் இந்த பயணத்தடை என்பது மக்களை தொற்றிலிருந்து பாதுகாப்பதற்காகவே எனவே பொதுமக்கள் இந்த பயணத்தடைகாலத்திலாவது சுகாதாரப் பிரிவினரின் கட்டுப்பாடுகளுடன் வீடுகளில் இருப்பது மிகவும் சிறந்ததாகும்

இன்றைய தினம் பொதுமக்களுக்கு சிகிச்சை வழங்கவென சிகிச்சை நிலையத்தினை திறந்து வைத்திருக்கின்றோம் அதாவது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மாகாண பணிப்பாளர் மற்றும் ஏனைய சுகாதாரப் பிரிவினர் மற்றும் நமது ராணுவத்தினரின் முயற்சியின் பயனாக இன்றையதினம் இந்தப் இடைக்கால சிகிச்சை நிலையம் திறந்து வைக்கப்பட்டது

இந்த சிகிச்சை நிலையத்தில்200 கட்டில்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது எனவே யாழ்ப்பாண மாவட்டத்தில் பொதுமக்கள் சுகாதார பிரிவினருடன் இணைந்து யாழ் மாவட்டத்தில் தொட்டிலை இல்லாதொழிக்க உதவ முன்வரவண்டும் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.