பால்மாவின் விலையை அதிகரிக்க நடவடிக்கை.

இலங்கையின் முழுமை பால்மா இறக்குமதியாளர்கள் எதிர்காலத்தில், ஒரு கிலோ முழுமைப் பால்மா பெக்கெட்டின் சில்லறை விலையை 350 ரூபாவால் உயர்த்தவும், 400 கிராம் பெக்கெட்டை 140 ரூபாவால் உயர்த்தவும் ஆலோசித்து வருகின்றனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் ஏற்கனவே இது தொடர்பில் கோரிக்கையை நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய கொள்வனவுகளை வரவழைப்பதற்கு இந்த விலை அதிகரிப்பு மிக முக்கியமானது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

எனவே, இது தொடர்பாக முறையான கோரிக்கை நுகர்வோர் அதிகார சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த அதிகரிப்பு, மொத்த விற்பனை விலையில் 32 சதவீதமாக மட்டுமே இருக்கும் என்று இறக்குமதியாளர்கள் அறிவித்துள்ளனர் விலை அதிகரித்தவுடன், ஒரு கிலோ மற்றும் 400 கிராம் பெக்கெட் 1,295 ரூபா மற்றும் 520 ரூபாவுக்கு விற்கப்படும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகளவில் முழு ஆடை பால்மாக்கான தேவை அதிகரித்துள்ளது. தற்போதைய நிலையில் 4 முதல் 6 வாரங்களுக்கு மட்டுமே கையிருப்பு போதுமானதாக இருப்பதால் ஜூலை இறுதியில், புதிய கொள்வனவுக்கான கட்டளைகளை அனுப்பவேண்டியுள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆகையால், தாம் வர்த்தக அமைச்சகத்திலிருந்து விரைவான பதிலை எதிர்பார்ப்பதாக இறக்குமதியாளர்கள் அறிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.