வரலாற்றில் முதற்தடவையாக பாராளுமன்ற விசேட பாதுகாப்பு ஒத்திகை

பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான விசேட ஒத்திகை நிகழ்வொன்று நேற்றைய தினம் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்றது.

இதன்படி நேற்றைய தினம் முற்பகல் 10.30 க்கு சபை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு சபை விவாதம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததனையடுத்து இடம்பெறக்கூடிய இடர்கள், பிரமுகர் பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட செயற்பாடுகள் குறித்து இதன்போது ஒத்திகை முன்னெடுக்கப்பட்டது.

இந்த விசேட ஒத்திகை சபையில் இராணுவம், கடற்படை, விமானப்படை, இலங்கை பொலிஸ், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், புலனாய்வுப் பிரிவினர், தீயணைப்பு பிரிவினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டதாக பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இவ்வாறானதொரு ஒத்திகை நிகழ்வொன்று பாராளுமன்ற வரலாற்றில் முதற்தடவையாக முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.