கொரோனா தொற்றிலிருந்து நாட்டு மக்களை பாதுகாக்கும் சவாலை வெற்றிக்கொள்வதாக ஜனாதிபதி உறுதி

கொரோனா தொற்றில் இருந்து நாட்டு மக்களை பாதுகாக்கும் சவாலை வெற்றிக்கொள்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.

கொவிட் ஒழிப்பு ஜனாதிபதி செயலணியுடன் நேற்றைய தினம் நடைபெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

கொவிட் பரவ ஆரம்பித்தமையை தொடர்ந்து உலகின் பல நாடுகளுக்கு முன்னர் அதனை கட்டுப்படுத்த இலங்கை அரசாங்கம் பல வெற்றிகரமான நடவடிக்கைகளை மேற்கொண்டதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

முறையான திட்டங்களை வகுத்து செயற்பட்டமையின் ஊடாக ஒவ்வொன்றாக வெற்றிக்கொள்ள முடிந்ததாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

தனிமைப்படுத்தல் நிலையங்கள் தொடர்பாக எந்தவொரு நாட்டிலிருந்தும் அறியக்கிடைக்காத போதிலும் அதனை இலங்கை அறிமுகப்படுத்தியதனை பலர் மறந்துவிட்டதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கொவிட் ஒழிப்பு ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டது முதல் சீனாவின் வூஹான் மாநிலத்தில் நிர்கதியாகியுள்ள மாணவர்களை மீட்டு எடுத்தது வரையான அனைத்து நடவடிக்கைகளிலும் ஏனைய நாடுகளுக்கு முன்னுதாரணமாக அரசாங்கம் என்ற வகையில் பொறுப்புடன் மேற்கொண்ட நடவடிக்கைகளையும் ஜனாதிபதி நினைவுகூர்ந்தார்.

70 தனிமைப்படுத்தல் நிலையங்களின் பங்களிப்புடன் 74 நாடுகளில் இருந்து 16 ஆயிரத்து 279 பேரை தாயகத்துக்கு அழைத்து வந்து தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டு வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்தனையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ள இராஜாங்கனை உள்ளிட்ட ஏனைய பகுதிகளிலும் P.C.R சோதனைககைள அதிகரிக்கச்செய்யுமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

Comments are closed.