ராமர் குறித்த நேபாள பிரதமரின் கருத்துக்கு அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சு விளக்கம்

ராமரின் பிறப்பிடமாக இந்துக்களால் நம்பப்படும் இந்தியாவிலுள்ள அயோத்தி நகரம் என்பது உண்மையில் அவரது பிறப்பிடம் இல்லை என்றும், காத்மண்டு அருகே உள்ள அயோத்தி என்ற சிறு கிராமம்தான் ராமரின் உண்மையான பிறந்த இடம் என நேபாளப் பிரதமர் கே.பி.சர்மா ஒலி ராமர் தெரிவித்தார்.

அதேபோல், கடவுள் ராமர் ஒரு நேபாளி எனவும், அவர் இந்தியர் அல்ல எனவும் நேபாளப் பிரதமர் ஒலி தெரிவித்திருந்தார்.

நேபாள பிரதமரின் இந்த கருத்துக்கு இந்திய அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் அதற்கான விளக்கத்தை வெளியுறவுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

ராமர் பற்றி பிரதமர் சர்மா ஒலி தெரிவித்தது அரசியல் ரீதியான கருத்து அல்ல தெரிவித்துள்ள வெளியுறவு அமைச்சு அயோத்தியின் மாண்பை குறைக்கும் வகையில் கேபி சர்மா ஒலி அந்த கருத்தை தெரிவிக்கவில்லை எனவும் வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் யாருடைய உணர்வுகளையும் காயப்படுத்தும் நோக்கத்தில் பிரதமர் கேபி சர்மா ஒலி இந்தக்கருத்தை தெரிவிக்கவில்லை எனவும் நேபாள வெளியுறவுத்துறை அமைச்சின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

Comments are closed.