இலங்கை இராணுவம் வாகன சாரதி பத்திரங்களை தயாரிக்கும் : கமல் குணரத்ன

வாகன சாரதி பத்திரங்கள் தயாரிப்பதை இலங்கை ராணுவத்திற்கு அடுத்த ஆண்டு முதல் ஒப்படைக்க அரசு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பான கலந்துரையாடல் அமைச்சர் மஹிந்த அமரவீராவின் ஏற்பாட்டில் போக்குவரத்து சேவை அமைச்சகத்தில் நேற்று (14) நடைபெற்றது.

வாகன சாரதி பத்திரங்ககளைப் பெறுவதற்கு வழக்கமாக ரூ .1,340 செலவாகும் என்றும், ஒரு தனியார் நிறுவனத்திற்கு வாகன சாரதி பத்திரங்கள் வழங்குவதற்கான ஒப்பந்தத்தின் காரணமாக ஆண்டுதோறும் இலங்கைக்கு கிடைக்க வேண்டிய பெரும் தொகை பணம் குறிப்பிட்ட வெளிநாட்டு கம்பெனிக்கு செல்வதாகவும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன கூறுகையில், இராணுவத்தினரால் வாகன சாரதி பத்திரங்களை மிகக் குறைந்த செலவில் தயாரிக்க முடியும் என தெரிவித்தார்.

Comments are closed.