சாவகச்சேரியில் ரயில் மோதி ஒருவர் பலி

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு சென்று கொண்டிருந்த யாழ் தேவி ரயில் மோதி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று (15) காலை 10 மணியளவில் சாவகச்சேரி சந்தைக்கு அண்மையில் தனக்களப்பு வீதியில் உள்ள ரயில் கடவையில் இடம்பெற்றுள்ளது.

இவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Comments are closed.