புயலால் அழிவடைந்த வாழைகளுக்கு நஷ்ட ஈடு: அமைச்சர் டக்ளஸின் முயற்சி இறுதி கட்டத்தை அடைந்தது!

யாழ். மாவட்டத்தில் வீசிய அம்பான் புயலால்பாதிக்கப்பட்ட வாழை மற்றும் பப்பாளி உற்பத்தியாளர்களுக்கு நஷ்டஈடு வழங்குவதற்கு விஷேட அமைச்சரவைப் பத்திரமொன்றை தாக்கல் செய்யுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் அமைச்சரவை கோரியுள்ளது.

இன்றையதினம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்குவது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சரவையின் பார்வைக்கு கொண்டுசென்றிருந்தார். இதையடுத்தே நஷ்டஈட்டை வழங்கவதற்கு விஷேட அமைச்சரவை பத்திரமொன்றை தாக்கல் செய்யுமாறும் அதற்கு அமைச்சரவை அனுமதி வருவதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் அமைச்சரவை கோரியுள்ளது.

அதனடிப்படையில், அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் இதுதொடர்பான அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

முன்பதாக கடந்த ஏப்ரல் மாத இறுதியில் யாழ். மாவட்டத்தில் வீசிய அம்பான் புயலால் சுமார் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட வாழைச் செய்கை மற்றும் பப்பாசிச் செய்கை முற்றாக அழிக்கப்பட்டிருந்தது.
இதனால் குறித்த பயிர்களை பயிரிட்ட விவசாயிகள் பெரும் பொருளாதார நஷ்டத்தை எதிர்கொண்டிருந்தனர். இதையடுத்து, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் குறித்த விவசாயிகள் தமது பயிரழிவுக்கான நஷ்ட ஈடுகளை பெற்றுத்தருமாறு கோரிக்கை முன்வைத்திருந்தனர்.

இந்நிலையில் மே மாதம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போது குறித்த பயிரழிவுகளுக்கு நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை முன்வைத்திருந்தார்.

இதையடுத்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அமைச்ரவை குறித்த அம்பான் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க அனுமதி அளித்திருந்தது ஆனாலும் இதற்கான இழப்பிடுகளை வழங்குவதற்கு விவசாய அமைச்சு மற்றும் அனர்த்தமுகாமைத்தவ அமைச்சு ஆகியன நிதி இல்லை என தெரிவித்திருந்தன
இதையடுத்து குறித்த நஷ்ட ஈட்டை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மீண்டும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சரவையில் கோரியிருந்தார். இதையடுத்து “அம்பான்” புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச இணக்கம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையிலேயே குறித்த நஷ்டஈட்டை வழங்கவதற்கு விஷேட அமைச்சரவை பத்திரமொன்றை தாக்கல் செய்யுமாறும் அதற்கு அமைச்சரவை அனுமதி தருவதாகவும் அமைச்சர் டகடளஸ் தேவானந்தாவிடம் அமைச்சரவை இன்றையதினம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.