ரிலையன்ஸில் ஊழியர்கள் பணி நீக்கம் இல்லை; முழு போனஸ், மருத்துவ செலவு ஏற்பு – நீடா அம்பானி தகவல்!

கொரோனா காலத்தில் ரிலையன்ஸ் குழுமத்தின் ஊழியர்கள் பணி நீக்கம் அல்லது சம்பளக் குறைப்பு எதுவும் செய்யப்படவில்லை என்று ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸின் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் நீடா அம்பானி தெரிவித்தார்.

சந்தை மூலதனத்தால் இந்தியாவின் மிகப்பெரும் நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸின் 44வது ஆண்டு பொதுக்கூட்டம் அதன் தலைவர் முகேஷ் அம்பானி தலைமையில் இணைய வழியில் இன்று நடைபெற்றது. முதலீட்டாளர்கள் மற்றும் நுகர்வோரால் உன்னிப்பாக கவனிக்கப்பட்ட இதில் ரிலையன்ஸின் எதிர்கால திட்டங்கள் குறித்தும் கொரோனா காலத்தில் ரிலையன்ஸ் குழுமத்தால் மேற்கொள்ளப்பட்ட மக்களுக்கான நடவடிக்கைகள் குறித்தும் முகேஷ் அம்பானி, நீடா அம்பானி ஆகியோர் எடுத்துரைத்தனர்.

ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தலைவரான நீடா அம்பானி பொதுக்கூட்டத்தில் பேசுகையில், “கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று பரவல் தொடங்கிய போது ஒரே இரவில் நாம் அனைவரும் முழுநேர வேலைகளை வீட்டிலிருந்து செய்யத் தொடங்கினோம்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

ரிலையன்ஸின் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் யாரும் வேலை இழப்பு, சம்பள குறைப்பு போன்ற பிரச்னைகளை சந்திக்காமல் பார்த்துக்கொண்டோம். இந்த நேரத்தில் முழு போனஸ் தொகையையும் ஊழியர்களுக்கு அளித்தோம். ஊழியர்களுக்கான மருத்துவ செலவீனங்களை முழுமையாக அளித்தோம். சம்பளத்துடன் கூடிய விடுமுறைகளை அளித்தோம்.

எங்களால் இயன்ற அளவிலான முயற்சிகளுக்கு மத்தியிலும் கூட ரிலையன்ஸ் குடும்பத்தில் விலைமதிக்க முடியாத உறுப்பினர்களை நாங்கள் இழந்தோம் என்பது இதயத்தை நொறுக்குவது போல உள்ளது. நம் இதயங்களிலும், மனங்களிலும் அவர்கள் விட்டுச் சென்ற வெற்றிடத்தினை யாராலும் நிரப்ப முடியாது. மறைந்தவர்களின் கனவுகள் நிறைவேறுவதற்கு ரிலையன்ஸ் குழுமம் அவர்களின் குடும்பங்களுக்கு உறுதுணையாக என்றும் இருக்கும்.

மேலும் மறைந்த ரிலையன்ஸ் ஊழியர்கள் பெற்ற சம்பளத் தொகையை அவர்களின் குடும்பத்தினருக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரிலையன்ஸ் வழங்கும். அவர்களின் குழந்தைகளின் கல்லூரி படிப்பு வரை அவர்களுக்கான கல்வி செலவை ரிலையன்ஸ் ஏற்கும், அத்துடன் வாழ்நாள் முழுவதும் குடும்பத்திற்கு மருத்துவ பாதுகாப்பு தொடர்ந்து இருப்பதை உறுதிசெய்வோம்.

இது தவிர, கொரோனாவால் இறந்த ஊழியர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்ச ரூபாய் இழப்பீடாக ரிலையன்ஸ் வழங்கும் எனவும் நீடா அம்பானி தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.