தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய மேலும் 743 பேர் கைது.

நாட்டில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 743 பேர் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் இன்று அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“குளியாப்பிட்டி பகுதியிலேயே பெருமளவானோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

அதேவேளை, மாத்தளையில் 78 பேரும், கண்டியில் 66 பேரும், புத்தளத்தில் 50 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுவோரைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றது.

முகக்கவசம் அணியத் தவறுவோர் தொடர்பில் அதிகக் கவனம் செலுத்தப்படுகின்றது.

எனவே, தனிமைப்படுத்தல் சட்ட விதிகளைப் பின்பற்றுமாறு மக்களைக் கேட்டுக்கொள்கின்றோம்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.