மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை எப்போது நீக்கப்படும் என்று இப்போது கூறமுடியாது!

“நாட்டில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை இரவு 10 மணி முதல் அமுலில் இருந்த பயணக் கட்டுப்பாடு இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணிக்குத் தளர்த்தப்பட்டாலும், மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கும். அந்தத் தடை எப்போது நீக்கப்படும் என்று இப்போது எம்மால் கூறவே முடியாது.”

இவ்வாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பதில் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண ஊடகங்களிடம் தெரிவித்தார்.

மாவட்டங்களுக்குள் பயணத் தடை தளர்த்தப்பட்டாலும், தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ளவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் இருப்பவர்கள் தனிமைப்படுத்தல் காலம் நிறைவடையும் வரை வெளியில் வர முடியாது எனவும் அவர் கூறினார்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

அதேவேளை, அத்தியாவசிய தேவைக்காக மட்டும் வெளியில் செல்லுமாறும், சுகாதார நடைமுறைகளைத் தொடர்ந்தும் பின்பற்றுமாறும் சுகாதாரத் தரப்பு, பொதுமக்களிடம் கோர்க்கை விடுத்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.