ஆன்லைன் மூலம்கட்டிட அனுமதி..இந்தியாவில் முதன்முறையாக புதுச்சேரியில் துவக்கம்..

புதுச்சேரி தேசிய தகவலியல் வமயம் (NIC) வடிவமைத்த ‘ஆன்லைன்” கட்டிட அனுமதி வழங்கும் அமைப்பு முலமாக, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள நான்கு நகர அமைப்புக் குழுமங்கள் கட்டிட அனுமதி வழங்கும் முறை 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்டது.

இந்த முறையில் கட்டிட வரைபடங்களை தாளாக ஆய்வு செய்யும் மென்பொருள் இணைக்கப்படவில்லை. கட்டிட வரைபடங்களைத் தானாக தேர்வு செய்ய பெங்களுர் நிறுவனத்துடன் புதுச்சேரி நகர மற்றும் கிராம அமைப்புத் துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது. கட்டிட வரைபடங்களை, தானாக ஆய்வு செய்ய மென்பொருளை இலவசமாக வழங்கியது.

இந்த மென்பொருளைத் தற்போதுள்ள ஆன்லைன் கட்டிட அனுமதி வழங்கும் அமைப்புடன் இணைக்க, புதுச்சேரி தேசிய தகவியல் மையத்திற்குத் தொழில்நுட்ப உதவி செய்யவும் முன்வந்தது.அமைப்புக் குழுமங்களில் பெறப்படும் விண்ணப்பங்களில் முதல் கட்டமாக 80% விண்ணப்பங்களாள தரை தளம் மற்றும் முதல்தளம் உள்ள குடியிருப்பு கட்டிடங்களின் கட்டிட வரைபடங்களைத் தானாக ஆய்வு செய்யும் மென்பொருளினை இணைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. இத்திட்டம் பற்றி செயலர் மகேஷ் கூறுகையில், தொழில் செய்வதை எளிமைப்படுத்தவும், வெளிப்படைத்தன்மையை ஊக்குவிக்கவும் இம்முயற்சி புதுச்சேரியில் முதன் முதலில் துவங்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் மூலம் கட்டிட அனுமதி முறை இந்திய யூனியன் பிரதேசங்களில், யூனியன் பிரேதசம் முழுவதும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் முதல் முதலாக நடை முறைப்படுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் அனைத்து நகர அமைப்புக் குழுமத்தின் அலுவலர் மற்றும் நகர அமைப்புக் குழுமத்தில் பதிவு செய்துள்ள உரிமம் பெற்ற தொழில்நுட்ப நபர்களுக்கும் இந்த மென்பொருளைக் கொண்டு, கட்டிட வரைபடம் தயாரிக்கவும், ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கவும், அனுமதி வழங்கவும் பயிற்சி தரப்பட்டுள்ளது.

கட்டிட வரைபட அனுமதி வழங்கும் முறை முழுமையாக ஆன்லைனில் மேற்கொள்ளப்படும். அதாவது, விண்ணப்பம் சமர்ப்பித்தல் கட்டிட வரைபடங்கள் மற்றும் விண்ணப்பங்களை பரிசீலனை செய்தல், கட்டணம் செலுத்துதல் மற்றும் கட்டிட வரைப்பட அனுமதி அளித்தல் ஆகிய அனைத்து பணிகளும் ஆன்லைனில் மேற்கொள்ளப்படும். கட்டிட வரைபட அனுமதியின் வாயிலாக கட்டிட வரைபடங்கள் தானாகவே பரிசீலிக்கப்படும், மேலும் மனித குறுக்கீடு இல்லாமல், விண்ணப்பங்ளைப் பரிசீலனை செய்யும் கால அளவு குறையும்.

விண்ணப்பங்களின் பரிசீலனையில் வெளிப்படைத்தன்மை மற்றும் நகர அமைப்புக் குழுமங்களின் செயல்பாடு மேன்மை அடையும். உள்ளாட்சி அமைப்புகள், பொதுப்பணித்துறை, மின்துறை மற்றும் இதர துறைகளின் தடையில்லா சான்றிதழ் தேவைப்படாத பட்சத்தில், இரண்டு குடியிருப்புகள் வரை கொண்ட இரண்டு அடுக்கு கொண்ட குடியிருப்பு கட்டிடங்களுக்கு 10 வேலை நாட்களுக்குள் கட்டிட வரைபட அனுமதி வழங்கப்படும்.

தடையில்லா சான்றிதழ் அளிப்பதற்கு துறைகளுக்கு 21 நாட்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த 21 நாட்கள் கால அவகாசத்திற்குள் தடையில்லா சான்றிதழினை வழங்க துறைகள் தவறினால், “வழங்கப்பட்டதாக கருதப்படுகிறது” என்று கருதப்பட்டு, நகர அமைப்புக் குழுமத்தால் கட்டிட வரைபட அனுமதி வழங்கப்படும்.” என்று குறிப்பிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.