மனிதவள அபிவிருத்தி புலமைப்பரிசிலுக்கான ஜப்பான் உதவித்திட்டம்.

அரச துறையில் நிறைவேற்றுத் தரத்திலுள்ள பணியாளர்களுக்கு ஜப்பான் நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் பட்டப்-பின் படிப்பை மேற்கொள்வதற்காக –

ஜப்பான் அரசாங்கத்தால் ‘மனிதவள அபிவிருத்தி புலமைப்பரிசிலுக்கான ஜப்பான் உதவித்திட்டம்’ 2010 ஆம் ஆண்டு தொடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இதுவரை 180 பட்டப்-பின்படிப்பு வாய்ப்புக்கள் மற்றும் தத்துவார்த்தவியல் பாடநெறிகள் 08 இற்குமான வசதிகள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.

2021 செப்டெம்பர் மாதம் கற்கை நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ள மாணவர் குழுக்களுக்காக –

271 மில்லியன் ஜப்பான் யென் (அண்ணளவாக 488 மில்லியன் ரூபாய்கள்) நிதியுதவியை வழங்குவதற்கு ஜப்பான் அரசாங்கம் உடன்பாடு தெரிவித்துள்ளது.

மேற்படி புலமைப்பரிசிலைப் பெற்றுக் கொள்வதற்கான பரிமாற்றக் கடிதத்தை ஜப்பான் அரசாங்கத்துடன் கைச்சாத்திடுவதற்கும்,

மேற்படி நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்துடன் (Japan International Cooperation Agency -JICA) உடன்படிக்கையை எட்டுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.