முல்லைத்தீவில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் திடீர் சோதனை!

முல்லைத்தீவு மாவட்டத்தில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் புலனாய்வு உத்தியோகத்தர்களினால் மாவட்டத்தில் ஜீன் மாதம் முன்னெடுக்கப்பட்ட திடீர் இரகசிய சுற்றி வளைப்பு நடவடிக்கைகளின் போது 20 முறைப்பாடுகள் வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக குறித்த வழக்குகள் அடுத்த மாதம் பதிவுசெய்யப்படவுள்ளன.

இதன் போது அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யாது பதுக்கி வைத்திருந்த, கட்டுப்பாட்டு விலைகளை மீறி விற்பனை செய்த, புதிய விலைகளை காட்சிப்படுத்தாத மற்றும் குறிக்கப்பட்ட விலைக்கு அதிகமாக பொருட்களை விற்பனை செய்த வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களிற்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாவட்டத்தின் பிரதான வர்த்த நிலையங்கள், மருந்தகங்கள், மரக்கறி விற்பனை நிலையங்கள் போன்றவற்றிலும் திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.