பிட்காயின் வாங்க ஆசைப்பட்டு 3.5 கோடியை இழந்த நபர்- அதிர்ச்சி சம்பவம்!

நபர் ஒருவர் பிட்காயின் வாங்க ஆசைப்பட்டு மேற்கொண்ட முயற்சியில் மோசடி நபரிடம் 3.5 கோடி ரூபாயை இழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பெங்களூருவை சேர்ந்தவர் கவுதம்(37). இவர் பிட்காயின் வாங்க ஒரு மோசடி நபரிடம் 3.5 கோடி ரூபாயை கொடுத்து ஏமாந்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்தாவது, அண்மையில் குர்ணால் அனூர் சந்தரன்னா என்ற நபர் எனக்கு அறிமுகமானார். தன்னை கிரிப்ட்டோ கரன்சி டீலர் என அறிமுகம் செய்து கொண்டார் அவர்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

எனது நண்பர் ரமேஷ் மூலமாக குர்ணால் எனக்கு அறிமுகமானார். இந்த வணிகம் மூலமாக ரமேஷ் அதிகம் பணம் ஈட்டியதாகவும். அதற்கு குர்ணால் உதவியதாகவும் என்னிடம் சொல்லியிருந்தார்கள்.

இதனால், அவரது பேச்சை நம்பி நானும் குர்ணால் இடம் பிட்காயின் வாங்க பணம் கொடுத்தேன். சுமார் 3.5 கோடி ரூபாயை வங்கி மூலமாக அவருக்கு அனுப்பி இருந்தேன்.

ஆனால் அவர் எனக்கு சொன்னப்படி பிட்காயின் வாங்கித் தரவில்லை. நானும் கொடுத்த பணத்தை கேட்டதற்கு சரியான பதில் வரவில்லை. ஆகவே அவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து, அதையடுத்து போலீசார் மோசடி செய்த குற்றத்திற்காக இந்திய தண்டனை சட்ட பிரிவு 420இன் கீழ் குர்ணால் மீது வழக்கு பதிந்து அவரை தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.