சென்னை ஐஐடியில் எரிந்த நிலையில் மாணவர் உடல் கண்டெடுப்பு!

சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவரின் உடல் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

சென்னை கோட்டூர்புரத்தில் ஐஐடி கல்லூரி இயங்கி வருகிறது.கொரோனாவின் காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டு இருப்பதால் ஐஐடி விடுதியில் மட்டுமே மாணவர்கள் தங்கி ஆன்லைன் வகுப்பு வாயிலாக கல்வி பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று மாலை 6.15 மணியளவில் ஐஐடி வளாகத்திலுள்ள ஹாக்கி மைதானத்தில் விளையாடுவதற்காக விளையாட்டு பயிற்சியாளர் ராஜூ தனது நண்பர்களுடன் வந்துள்ளார். அப்போது எரிந்த நிலையில் ஆண் நபரின் சடலம் ஒன்று இருந்ததை கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். இது தொடர்பாக கோட்டூர்புரம் காவல் நிலையத்திற்கு அவர் தகவல் அளித்துள்ளார். தகவலில் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் இறந்த நபர் கேரளா மாநிலத்தை சேர்ந்த உன்னி கிருஷ்ணன் நாயர் (22) என்பது தெரியவந்தது. இவரது தந்தை இஸ்ரோவில் விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார். கேரளாவில் பி.டெக் படிப்பை முடித்த உன்னி கிருஷ்ணன் 2021 ஆம் ஆண்டு ஐஐடியில் பிராஜெக்ட் அசோசியெட் படிப்பில் சேர்ந்துள்ளார். வேளச்சேரி லதா தெருவில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி படித்து வந்துள்ள அவர், இன்று காலை கல்லூரிக்கு வந்ததும் தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து உன்னிகிருஷ்ணன் இறப்பிற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணைநடத்தி வருகின்றனர். இதனிடையே அவர் தங்கியிருந்த வேளச்சேரி வீட்டில் இருந்து கடிதம் ஒன்ற போலீசார் கண்டெடுத்தனர். அதில், மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொள்வதாக உன்னி கிருஷ்ணன் எழுதியிருந்ததாக கூறப்படுகிறது. போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.