முல்லைத்தீவில் கொரணா தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு முன்னெடுப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு கல்வி வலயத்திற்குட்பட்ட ஆசிரியர்களுக்கும், முல்லைத்தீவு பிரதேசத்தை சேர்ந்த 60 வயதிற்கு மேற்பட்டோருக்கும் COVID-19 தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முல்லைத்தீவு உண்ணாப்பிலவு ஆதார வைத்தியசாலையில் (8) தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு பாதுகாப்பு படைப்பிரிவினரின் பங்களிப்போடு சுகாதார பகுதியினரும் இணைந்து தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளார்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு நான்காயிரம் தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் முதற்கட்டமாக புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் 1120 பேருக்கு கடந்த மூன்று நாட்களாக தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளன.

தொடர்ந்து ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை பணிப்பாளர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு வலயத்திற்குட்பட்ட 1600 ஆசிரியர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இன்று(8) உண்ணாபிலவு ஆதார வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது முல்லைத்தீவு பகுதியை சேர்ந்த 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொது சுகாதார பரிசோதகர்களின் அறிவுறுத்தலுக்கு அமைவாக மக்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு கொடுக்கப்பட்டு ஊசி ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

தடுப்பூசி ஏற்றப்படும் நடவடிக்கைகளை முல்லைத்தீவு பாதுகாப்பு படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் சிசிர பிலப்பிட்டிய நேரடியாக வருகை தந்து பார்வையிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.