இலங்கையில் மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு.

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பு, கண்டி, கேகாலை, நுவரெலியா, இரத்தினபுரி, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும் களு, களனி, கின், நில்வள கங்கைகளை அண்மித்த மற்றும் இருமருங்கிலும் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கங்கைகளை அண்மித்த வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகள் அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்த வேண்டும் என நீர்ப்பாசன திணைக்களத்தின் பணிப்பாளர் அறிவுறுத்தியுள்ளார்.

இதேவேளை, கடும் மழையுடனான காலநிலை காரணமாக ஏற்படக் கூடிய வெள்ளப்பெருக்குக்கு மத்தியில் நிவாரணம் வழங்குவதற்காகக் களுத்துறை, இரத்தினபுரி மற்றும் காலி ஆகிய மாவட்டங்களுக்கு கடற்படையின் நிவாரணக்குழு அனுப்பப்பட்டுள்ளதாக கடற்படை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக 37 நிவாரணக் குழுக்கள் தயார் நிலையில் உள்ளன எனவும் கடற்படை தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.