எந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்.

*ஞாயிற்றுக்கிழமை — சுபகாரியம் தொடங்கலாம், வெளியூர் புறப்படுதல், பதவி ஏற்றல், சிகிச்சை மேற்கொள்ளல் விதை விதைத்தல். கிரகப்பிரவேசம், வாகனங்கள் வாங்குதல். சூரியன் அல்லது அனுமன் வழிபாடு செய்யலாம்.

*திங்கட்கிழமை — வர்த்தக ஆரம்பம் திருமணம், புராணங்கள் படித்தல். தானிய சேமிப்பு. யாகங்கள், கிணறு வெட்டுதல். மாங்கல்யத்திற்குப் பொன் உருக்குதல், கோயிலுக்குத் திருப்பணி தொடங்குதல், சிவனை வணங்கி அன்னதானம் செய்தல் ஆகியன செய்யலாம்.

*செவ்வாய்க்கிழமை — போருக்கான ஏற்பாடுகள் செய்தல். நெருப்பு சார்ந்த பணிகளைத் தொடங்கிடல், வாகனங்களுக்குப் பூஜையிடல் அஸ்திரவித்தைகள் பழகுதல். முருகப்பெருமானை வணங்கி ஏழைகளின் திருமணத்துக்கு உதவிடல் செய்யலாம்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

*புதன் கிழமை — திருமாங்கல்யம் செய்தல். மருந்து உண்ண ஆரம்பித்தல் கல்வி கலை கற்கத் தொடங்குதல். பெருமாளை வணங்கி ஆடை தானம் அளித்தல் செய்யலாம்.

*வியாழக்கிழமை — கடவுள் படங்கள் சிலைகள் வாங்குதல் பிரதிஷ்டை செய்தல் சுபகாரியங்கள் செய்தல். குழந்தைக்குப் பெயர் சூட்டுதல் தியானம் பழகத் தொடக்கம். போர்வெல் கிணறு போடுதல். வேதம் கற்றிடத் தொடங்குதல் தட்சிணாமூர்த்தியை வணங்கி அன்னதானம் வழங்குதல். அறிஞர்கள் உரை கேட்டல். மகான் களை தரிசித்தல். ஆகியன செய்யலாம்.

*வெள்ளிக்கிழமை– திருமணம், சுமங்கலி பிரார்த்தனை பூஜைகள் கிரகப்பிரவேசம். குழந்தைகளுக்கு சோறு ஊட்டல் தர்ம ஸ்தாபனங்கள் ஆரம்பித்தல். குழந்தையைத் தொட்டிலில் இடுதல், வளைகாப்பு நடத்துதல், காதுகுத்தல். மகாலட்சுமியை வணங்கி மங்களப் பொருட்களை தானமளித்தல் ஆகியன செய்யலாம்.

*சனிக்கிழமை — எள்,உளுந்து,பருத்தி விதைத்தல் இரும்பு சார்ந்த பணிகளைத் தொடங்குதல். வளர்ப்புப் பிராணிகள் வாங்குதல். இயந்திரங்கள் தொடர்பான பணிகளைச் செய்தல் சனிபகவானை ஆராதித்து மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுதல் ஆகியவற்றைச் செய்யலாம்.

Leave A Reply

Your email address will not be published.