அறிவியல்நகர் பல்கலைக் கழக வளாகத்திற்கு முன்பக்கமாகவுள்ள வீதிகள் திருத்தம்.

கிளிநொச்சி மாவட்டத்தில் அறிவியல்நகர் பல்கலைக் கழக வளாகத்திற்கு முன்பக்கமாகவுள்ள வீதியின் அகலிப்பு மற்றும் கார்ப்பெற் இடுவதற்கான பணிகள் தற்போது துரித கதியில் இடம்பெற்றுவருகிறது.

குறித்த வீதி அபிவிருத்திச் செயற்பாட்டினால் யாழ்.பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகம், ஜேர்மன் தொழில் நுட்பக் கல்லூரி ஆகியவற்றிற்கு வருகின்ற உத்தியோகத்தர்கள் மற்றும் மாணவர்களும் மற்றும் வானவில், விடியல் ஆடைத்தொழிற்சாலைகள், கார்கில்ஸ் பழத்தொழிற்சாலை போன்றவைகளுக்கு வருகின்ற பணியாளர்களும் மற்றும் குறித்த பகுதி கிராமங்களைச்சேர்ந்த பொது மக்களும் மிகுந்த நன்மை அடையவுள்ளனர்.

குறிப்பாக, தினமும் காலை, மாலை வேளைகளில் அலுவலக நேரங்களில் A-09 வீதியினை பயன்படுத்தி இப்பகுதிக்கு வந்துசெல்லுகின்ற மக்களுக்கு வாகன நெருக்கடி குறைந்த இலகுவான பயணத்திற்கான ஒரு மாற்றுப்பாதையாகவும்,
இது அமையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இதேவேளை, துரித கதியில் இடம்பெற்றுவரும் இவ்வீதி அபிவிருத்தி செயற்பாடானது தமக்கான “அறிவியல் நகர அபிவிருத்திக்கான” ஆரம்ப மைல் கல்லாக தாங்கள் கருதுவதாக இப்பகுதி கிராம மக்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.