வெவ்வேறு இடங்களில் ஹெரோய்னுடன் பெண்ணொருவர் உள்ளிட்ட 11 பேர் கைது.

நாட்டின் பல பிரதேசங்களில் நேற்று மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளில் பெண்ணொருவர் உள்ளிட்ட 11 பேர் ஹெரோய்ன் போதைப்பொருடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தலங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாலபே பிரதேசத்தில் தலங்கம பொலிஸார் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, 10 கிராம் 100 மில்லிகிராம் ஹெரோய்னுடன் பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அனுராதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரத்னாயக்கபுர பிரதேசத்தில் அனுராதபுரம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசேட சுற்றவளைப்பில் 13 கிராம் 590 மில்லிகிராம் ஹெரோய்னுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பூகொட மற்றும் கிரிபத்கொட ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 34,39 வயதுடைய இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

மிஹிஜய சேவன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சத்ஹிரு உயன பிரதேசத்தில் மிஹிஜய பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பில் 9 கிராம் 300 மில்லிகிராம் ஹெரோய்னுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கொழும்பு 14 பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, மிஹிஜய ரந்திய உயன பிரதேசத்தில் மிஹிஜய சேவன பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 8 கிராம் 500 மில்லிகிராம் ஹெரோய்னுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். முகத்துவாரம் பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட் கம்பிகொட்டுவ பிரதேசத்தில் கிராண்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 5 கிராம் 300 மில்லிகிராம் ஹெரோய்னுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கிராண்டபாஸ் பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடைய நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெத்சர உயன பிரதேசத்தில் பொரளை பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 4 கிராம் 670 மில்லிகிராம் ஹெரோய்னுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். பொரளை பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயது நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மேலும், கல்கிஸை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மல்லிகாராமா வீதிக்கு அருகில் கல்கிஸை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பில் 4 கிராம் 620 மில்லிகிராம் ஹெரோய்னுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இரத்மலான பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, தலங்கம, மன்னார் உள்ளிட்ட மேலும் மூன்று பிரதேசங்களில் 13 கிராம் 130 மில்லிகிராம் ஹெரோய்னுடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 39, 26, 29 வயதுடைய மூவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.