தாஜுதீன் கொலை சந்தேகநபர்களில் ஒருவர் உயிருடன் இல்லை; மற்றவர் நோயால் பாதிப்பு

இலங்கையின் பிரபல ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் படுகொலை விவகாரத்தில் சந்தேகநபர் எனக் கருதப்பட்ட முன்னாள் கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி பேராசிரியர் ஆனந்த சமரசேகர உயிருடன் இல்லை என்று சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றத்தில் இன்று அறிவித்துள்ளது.

சட்டமா அதிபர் சார்பில் ஆஜராகிய பிரதி சொலிசிட்டர் ஜெனரல் டிலான் ரத்நாயக்க இதனை அறிவித்துள்ளார்.

தாஜுதீன் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர சேனநாயக்கவின் உடல்நிலை மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார் எனவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்துள்ளார்.

தாஜுதீனின் சடலம் 2012ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் திகதி நாரஹன்பிட்டியில் எரியுண்ட கார் ஒன்றுக்குள் இருந்து மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முதலில் இது விபத்தால் ஏற்பட்ட மரணம் என அறிவிக்கப்பட்டபோதிலும், பின்னர் இடம்பெற்ற விசாரணைகளின்போது இது திட்டமிட்ட படுகொலை என்பது தெரியவந்தது.

Comments are closed.