நான் ஆட்சிக்கு வந்தால் மார்ச் மற்றும் ஏப்ரல் மின் கட்டணங்களை திருப்பி தருவேன் : சஜித்

எனது தலைமையிலான ஒரு அரசாங்கம் உருவானதும் , மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மக்களால் செலுத்தப்பட்ட மின்சார கட்டணங்கள் மக்களுக்கு திருப்பித் தரப்படும் என்று கொழும்பு மாவட்ட வேட்பாளரும் ஐக்கிய மக்கள் சக்தியன் தலைவருமான சஜித் பிரேமதாச ரம்புக்கனாவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் வைத்து தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலின் போது மக்கள ஏமாற்றியது போல இப்போதும் ஏமாற்ற முனைகிறார்கள். அப்போது செய்யப்பட்ட மோசடி போலவே மீண்டும் மீண்டும் செய்யப்படுவதாகவும், அரசாங்கத்திடம் பொய்கள் மற்றும் மோசடிகள் மட்டுமே உள்ளன என்றும் தெரிவித்தார்.

சமுர்தி மானியமும் குறைக்கப்பட்டுள்ளதை அறிந்ததாகவும் அரசாங்கத்தின் நம்பிக்கை மக்களை உயிருடன் வைத்திருப்பது அல்ல, மக்களை படுகுழியில் தள்ளுவதாகும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், மக்கள் அரசாங்கம் ஒன்று உருவாக்கப்படும் என்று கூறிய சஜித் பிரேமதாச , எமது அரசு நிச்சயமாக மக்கள் சார்பு, மக்கள் நட்பு மற்றும் மக்களை நேசிக்கும் அரசாக சாதாரண சகாப்தம் ஒன்றை உருவாக்கும் என்றார்.

Comments are closed.