மாணவிகளுக்கு சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை தர உதவிய 5 பெண் ஆசிரியைகள் வீட்டை பூட்டி விட்டு தப்பியோட்டம்!

பாலியல் புகாரில் கைதான சிவசங்கர் பாபாவின் பள்ளி ஆசிரியைகள் 5 பேர் தப்பியோடி தலைமறைவாகியுள்ளனர்.

மாணவிகள் கொடுத்த பாலியல் தொல்லை புகாரில் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் சிவசங்கர் பாபா மீதான பாலியல் தொல்லை வழக்கில் அவரது பள்ளி ஆசிரியைகள் 5 பேரிடம் விசாரிக்க சிபிசிஐடி முடிவு செய்திருந்தனர்.

இந்நிலையில் சிபிசிஐடி சம்மன் கொடுக்க சென்றபோது சிவசங்கர் பாபாவின் சுஷில் ஹரி பள்ளி ஆசிரியர்கள் தப்பி ஓட்டம் என சிபிசிஐடி தெரிவித்துள்ளது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

கேளம்பாக்கம் பழனி கார்டனில் உள்ள ஆசிரியைகளை 5 பேருக்கு சம்மன் அளிக்க சென்றபோது உண்மை தெரியவந்துள்ளது.

மாணவிகளுக்கு சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை தர உதவியதாக பள்ளி ஆசிரியைகள் 5 பேர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியை காயத்ரி மற்றும் அங்கு பணிபுரியும் பிரவீனா உள்ளிட்டோர் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராகாமல் இருக்க சம்மனை வாங்காமல் தலைமறைவாகியுள்ளனர்.

வீட்டை பூட்டி கொண்டு அவர்கள் தப்பியோடியது தெரியவந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.