திட்டமிடப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடையவர் துப்பாக்கி சூட்டில் பலி.

திட்டமிடப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடைய லலித் வசந்த என்பவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.

அதனை , பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

சீதுவை பகுதியில் பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த அதிசொகுசு வாகனம் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் வாகனத்தில் பயணித்த குறித்த நபர் பலியாகியுள்ளார்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

சுமார் 6 கொலைச் சம்பவங்கள் மற்றும் கொள்ளை சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த லலித் வசந்த என்பவரே உயிரிழந்துள்ளதாக ஊடகப்பேச்சாளர் கூறினார்.

மேலும் ,சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.