ஈபிஸ் – ஓபிஎஸ்-ஐ அரவணைத்து செல்ல விரும்புகிறேன்; சசிகலா

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அனைவரையும் அரவணைத்து செல்ல விரும்புவதாக சசிகலா தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து விடுதலையாகி வந்த பின் அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கியே இருந்தார். தேர்தல் முடிவுக்கு பின்னர் அவரது அரசியல் நடவடிக்கைகள் சூடு பிடித்துள்ளது. அதிமுகவை கைப்பற்றியே தீருவோம் என்று தொண்டர்களுடன் அவர் பேசும் ஆடியோ ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகி வருகிறது.

அந்தவகையில், தொண்டர் ஒருவருடன் பேசும் ஆடியோ ஒன்று மீண்டும் வைரலாகியுள்ளது. அதில், சசிகலா ஈபிஸ் – ஓபிஎஸ்-ஐ அரவணைத்து செல்ல விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இதுதொடர்பாக சங்கரன்கோவிலை சேர்ந்த தன்னுடைய ஆதரவாளர் கலைச்செல்வனுடன் தொலைபேசி வாயிலாக பேசிய சசிகலா கூறியதாவது, நல்லபடியாக கழகத்தை கொண்டு சென்று அம்மா ஆட்சியை மீண்டும் வர வைக்க வேண்டும். ஊரடங்கு முடிந்ததும், நான் அனைவரையும் சந்திப்பேன்.

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அனைவரையும் அரவணைத்து செல்லவே நான் விரும்புகிறேன். தொண்டர்களின் விருப்பப்படி கட்சியை வழிநடத்துவேன். எம்.ஜி.ஆர் ஜெயலலிதா காட்டிய வழியில் செல்வேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.