அப்பல்லோ மருத்துவமனைக்கு ஒரே நேரத்தில் சசிகலா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி வந்ததால் ஏற்பட்ட பரபரப்பு!

அதிமுகவின் மூத்த தலைவர் மதுசூதன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரை நலம் விசாரிக்க எடப்பாடி பழனிச்சாமி மற்றும் சசிகலா ஆகிய இருவரும் ஒரே நேரத்தில் சென்றுள்ளனர்.

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் வயது மூப்பின் காரணமாகவும், உடல்நிலை காரணமாகவும் தீவிர அரசியல் பணிகளில் இருந்து ஒதுங்கியுள்ளார்.

சென்னை, தண்டையார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் ஓய்வில் இருந்துவந்தார். உடல்நலக் குறைவு காரணமாக அவ்வப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இந்நிலையில், நேற்று அவருடைய உடல்நிலை மோசமடையவே, ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மதுசூதனனின் உடல்நிலை குறித்து விசாரிக்க முன்னாள் முதல்வரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தார். அதே சமயம் சசிகலாவும் அதிமுக கொடி கட்டிய காரில் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்துள்ளார்.

இதனால் இருவரும் ஒரே இடத்தில் இருந்தனர். இந்த நிலையில் சசிகலா வருகை குறித்து அறிந்த எடப்பாடி பழனிச்சாமி அவசரமாக மருத்துவமனையில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.

சசிகலாவும், எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து எதிரும் புதிருமாக இருக்கும் நிலையில் இருவரும் ஒரே இடத்தில் வந்ததால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது

Leave A Reply

Your email address will not be published.