01. ஈழப் போராட்டத்தின் இன்னொரு பக்கம் : செந்தூரன்

அழகிய சுழிபுரம் கிராமத்தில் தம்பிபிள்ளை ஒர் விவசாயி அதேவேளை நாசகம் தம்பிப்பிள்ளையால் உற்பத்தி செய்த பொருட்களை பண்டத்தரிப்பு சங்தையில் விற்பனை செய்வது வழக்கம்.

மேலும் இல்லறத்தின் பயனாக 3  ஆண்  குழந்தைகளையும் , 5 பெண்குழந்தைகளையும் பெற்றுக் கொள்கின்றார்கள் தம்பிப்பிள்ளை நாகசம் தம்பதியினர்.

இத் தம்பதிகளின்  எழாவது ஆண் குழந்தையாக1951/08/30 ம் திகதி  சுழிபுரத்தில் பிறந்தார் தம்பிப்பிள்ளை சந்ததியார்.

சந்ததியார் தனது உயர்தரம் வரை சுழிபுரம் மெய்கண்டான் வித்தியசாலையில் பயின்றார். பின்னாளில் 1971 ல் கொண்டுவரப்பட்ட கல்வி தரப்படுத்தலுக்கு எதிரான மாணவர் பேரவையில் இணைந்து அதற்கு எதிரான பல போரட்டங்களையும் முன்னெடுத்தார். பின்னாளில் இளைஞர் பேரவையிலும் செயற்பட தொடங்குகினார்.

இதே காலப்பகுதி யாழ்ப்பாணத்தில் இன்று போல் சாதியம் தலைவிரித்து ஆடிய காலம். அந்தகாலத்தில் சாதியத்திற்கு சாவுமணி அடிக்க தாழ்த்தப்பட்ட சாதியினரை உயர் சாதியினரின் கோவில்களுக்குள் அழைத்து செல்லுதல், உயர்சாதியினரின் பொதுக் கிணறுகளில் தாழ்த்தப்பட்ட சாதியினரை நீர் எடுக்க விடுதல் என பல போரட்டங்களை முன்னேடுத்தார் சந்ததியார்.

மேலும் வலதுசாரியான அமிர்தலிங்கத்தின் சுயநல அரசியலுக்காக தனது அரசியலுக்கு எதிரான அல்பிரட் துரையப்பாவை துரோகி என அறிவித்து கொலை செய்யுமாறு இளைஞர்களை தூண்டிவிடுகின்றார் அமிர்தலிங்கம். அல்பிரட் துரையப்பா கொலைக்கான தயார்படுதலுக்காக தனது தாயாரின் சங்கிலியை வழங்குகிறார் சந்ததியார். 27/07/1975ம் திகதி அல்பிரட் துரையப்பா பொன்னாலையில் வைத்து பிரபாகரனால் சுட்டுக் கொல்லப்படுகின்றார்.

மேலும் துரையப்பா கொலையை விசாரிக்க பஸ்ரியம்பிள்ளை என்ற பொலிஸ் அதிகாரியை நியமித்து கூடுதல் அதிகாரமும் வழங்கியது அன்றைய அரசு.

பஸ்ரியம்பிள்ளை மற்றும் துரையப்பா கொலையில் சந்ததியாருக்கு தொடர்பிருப்பதை அறிந்து சந்ததியாரை கைது செய்ய முயற்சி செய்ய சந்ததியார் தலைமறைவாகிறார். இதைவேளை சந்ததியாரை தேடிவரும் பொலிஸ் பலமுறை சந்ததியாரின் அக்கா புனிதவதியின் மகளான அன்னம்மாவை கைது செய்து கூட்டிக்கொண்டு போய் விசாரிப்பார்கள்.  இருப்பினும்  சந்ததியார் சரணடையவில்லை. ஆனால் வேறொரு இடத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

மேலும் சந்ததியார் மற்றும் நவாலி இன்பம் உட்பட ஆறு இளைஞர்களை கைது செய்து சிறையில் அடைத்தது அன்றைய அரசு.

சிறையில் அரசியல் பேசுபவர்களில் முக்கியமானவராக சந்ததியார் இருந்தார். இடதுசாரி அரசியல் வழியில் சிந்திக்க இங்குதான் இவர் பயிற்றப்பட்டார்.

சிறையில் உள்ள இளைஞர்கட்கு வெளியில் இருந்து உறவுகள், தாய், தந்தையர்கள், நண்பர்கள் உணவு அனுப்பும்போது அதை எல்லோருக்கும் பங்கிட்டுக் கொடுக்கும் பொறுப்பை அவர் ஏற்பார். சோற்றுப்பார்சல்கள் வரும்போது அதனை ஒன்றாய் கலந்து குழைத்துக் கொடுப்பார். தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் குழைத்துக் கொடுத்தால் ” இப்ப எனக்கு பசியில்லை” என்று சாப்பிடாமல் தவிர்க்கும் தமிழீழ இளைஞர்களும் சிறையில் இருந்தனர்.

ஒருமுறை சந்ததியாரின் சுழிபுரத்தை சேர்ந்த ஒடுக்கப்பட்ட சாதிப்பிரிவுக்குரிய மதுரநாயகம் என்பவர் சோறு குழைத்துக் கொடுத்த போது ” பசியில்லை என்று” சாப்பிடாமல் தவிர்த்தவர்கள் உண்டு. இதையடுத்து சந்ததியார் எப்போது சாப்பாடு வெளியே இருந்து வந்தாலும் அதைக் குழைத்துக் கொடுக்கும் பொறுப்பை மதுரநாயகத்திடமே கொடுத்தார்.

சிறைக்குள் தமக்கு அனுப்பப்படும் முட்டைமா, அரசிமா, பலகாரங்கள் என்பவற்றை பல இளைஞர்கள ஒழித்து வைப்பார்கள் அல்லது கொஞ்சத்தை மற்றவர்கட்கு காட்டிவிட்டு மிகுதியை பதுக்கி விடுவார்கள். இரவுசாமங்களில் அல்லது ஒழித்து தனியே சாப்பிடுவார்கள். இப்படியான சூழ்நிலையில் தான் சந்ததியாரின் அரசியல் வளர்ந்தது. கூட்டு வாழ்விற்கும், தோழமைக்கும் அவர் பயிற்றப்பட்டார்.

சிறையில் இருந்த போது JVP யினருடன் தொடர்பு கொண்டிருந்த சொற்பமான தமிழ் இளைஞர்களில் சந்தியாரும் ஒருவராவர். தமிழ் தேசியவாதியாக, அமிர்தலிங்கம் அனுதாபியாக சிறைக்கு சென்ற அவர் இடதுசாரிப்போக்கில் சிந்திப்பவராக சிறையை விட்டு வெளியே வந்தார்.

சிறையில் JVP யின் சுனந்ததேசப்பிரிய உட்பட பலருடன் அவருக்கு அரசியல் தொடர்பு இருந்தது. PLOTE இன் பெரும்பாலான சிங்கள இடதுசாரிகளுடனான தொடர்புகளுக்கு சந்ததியார் காரணமாக இருந்தவர் என்பதில் சந்தேகமில்லை. பின்னாளில் JVP யில் இருந்து பலர் PLOTE அமைப்பில் இணைய காரணமாக இருந்தவர் சந்ததியாரே.

சிறையில் இருந்து வெளிவந்த சந்ததியார் டேவிட் ஐயா என அழைக்கப்படும் சொலமன் அருளானந்தம் டேவிட் என்ற ஒரு கட்டடக் கலைஞருடனும் இலங்கையில் மருத்துவர் சோ. இராஜசுந்தரத்துடன் இணைந்து 1977 ஆம் ஆண்டில் காந்தியம் என்ற அமைப்பைத் தோற்றுவித்தனர்.

சந்தததியார் வவுனியாவில் 12 நவீன பண்ணைகள், நடமாடும் வைத்தியசாலைகள், பெண்களிற்கான பயிற்சி நிலையங்கள், சிறுவர்களிற்கான பால், திரிபோசா மா விநியோகம், சிறுவர்களுக்கு பாடஞ்சொல்ல ஆசிரியர்கள் எனப் பல திட்டங்களை நடைமுறைப்படுத்தியவர். அதேவேளை போரட்டம் தொடர்பான இரகசிய வகுப்புகளின் ஊடாக மாணவர்களுக்கு போதித்தார்.

டேவிட் ஐயா
டேவிட் ஐயா

மலையகத்திலிருந்த சில தொண்டர் நிறுவனங்களுடாக மலைநாட்டுத் தமிழரை வன்னியில் குடியேற்றுவதற்கு இவரது காந்தியம் அமைப்பு முன்னின்று உழைத்தது. ஏறத்தாழ 5000 மலையக மக்கள் வவுனியா, திருகோணமலை போன்ற தமிழ்ப் பிரதேசங்களில் இவ்வாறு குடியமர்த்தப்பட்டனர்.இன்று வன்னியில் தமிழர் சனத்தொகை பரம்பலை அதிகரித்த பெருமையும் தமிழரின் பூர்விகமான வாழ்விடங்களையும் பாதுகாக்த பெருமையும் சந்ததியார், டேவிட் ஐயா மற்றும் doctor இராஜசுந்தரம் ஆகியோரை சேரும்

இதேவேளை காந்தீயத்துடன் இயங்கிய வேளை புதிய விடுதலை புலிகள் அமைப்புடன் இயங்கி கொண்டிருந்தார் சந்ததியார் . இக்காலத்தில் ஊர்மிளா உமா விவகாரம் உச்சமடைந்த காலம்.

இதே வேளை பிரபாகரனுடன் இந்தியாவிற்கு படகில்  வந்தார் சந்ததியார். மத்திய குழுவில் உமாவை கொலை செய்வது என்று முடிவு எடுக்கப்படுகின்றது. இதைவேளை உமா இந்தியா செல்லவில்லை. இதானல் உமா தப்பித்துக் கொள்கின்றார்.

உமாவின் விசுவாசி சந்ததியார்  என்பதனால் , புலிகளால் ஏறக்குறைய வீட்டுக்காவலிலேயே சந்ததியார்  வைக்கப்பட்டிருந்தார். அவர் போகின்ற இடங்களுக்கெல்லாம்  ஒரு உளவாளி அனுப்பப்ட்டார்.

ஐயர் சென்னைக்கு வந்ததும் சந்ததியார் ஐயரைஅழைத்து மொட்டைமாடியில் பேசினார். உங்களது இயக்கம் தவறான பாதையில் செல்கிறது. எந்த ஜனநாயகமுமில்லை. எதையும் பேசமுடியாது. யாரும் கருத்துக்கூற முடியாது என்று தெரிவித்தார்.

அப்போது உமாமகேஸ்வரனைத் தொடர்புகொள்ள முடியாத வகையில் சந்ததியார் தடுக்கப்பட்டிருந்தார். அவர் போகுமிடமெல்லாம் , அவர் பின்னால் சந்ததியாருக்கு தெரியாதுவாறு ஒரு உளவாளி அனுப்பப்பட்டார். சந்ததியார்  வீட்டிலிருந்து எங்கு சென்றாலும் பின் தொடர ஒரு நாளைக்கு ஒருவர் என்ற வகையில் நியமிக்கப்பட்டனர்.

உமாமகேஸ்வரன் (முகுந்தன்)

உமாமகேஸ்வரன்  தப்பித்துகொண்ட பின்னர் சந்ததியாரைக் கொலைசெய்ய வேண்டும் என்ற கருத்தை மத்திய குழுவைக் கூடி பிரபாகரன் முன்வைக்கிறார்.

சந்ததியார் உமாமகேஸ்வரனின் கையாள். எதிர்காலத்தில் ஆபத்தாக அமையக் கூடியவர். அவரைக் கொலைசெய்ய வேண்டும் என்ற கருத்தை முன்வைக்கிறார்.

நாகராஜா அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார். முதல் தடவையாக ஐயரும் பிரபாகரனைப் பலமாக எதிர்க்கிறார். சந்ததியார் கொலைசெய்யப்படக் கூடாது என்பதில் ஐயர் உறுதியாக இருக்கிறார். பிரபாகரன் இதை எதிர்பார்க்கவில்லை. ஐயரை நோக்கிக் கூறுகிறார் ‘இனிமேல் நீங்களும் சந்ததியாரும் பட்டபாடு’ என்று விரக்தி தொனிக்கக் கூறுகிறார். மத்திய குழுக் கூட்டத்தின் போது பேபி சுப்பிரமணியம், பிரபாகரன், நாகராஜா, ஐயர் ஆகியோரே விவாதிக்கின்றனர். பேபி சுப்பிரமணியம் பிரபாகரனுக்கு எதிராகப் பேசவில்லை.

பிரபாகரன்

இறுதியாக சந்ததியாரை இனிமேல் அரசியலில் ஈடுபடக் கூடாது என்று எச்சரித்து, இலங்கையில் கொண்டு சென்று விடுவோம் என்ற கருத்தைப் பிரபாகரன் முன்வைக்க , மத்தியகுழு ஒரு மனதாக ஏற்றுக்கொள்கிறது.

ஐயர்  சந்ததியாருக்கு ஆதரவாகப் பேசியமையால் சந்ததியாரை எச்சரிக்கும் பொறுப்பு ஐயரிடம் வழங்ப்படுகிறது. ஐயர் சந்ததியாரிடம் போய் தமிழீழ விடுதலைப் புலிகளின் மத்திய குழுவின் முடிவுகளை முன்வைக்கிறார். தான் போகும் வழியில் தன்னைக் கடலுக்குள் தள்ளிக் கொலைசெய்து விடுவார்களோ என்ற பயம் கூட சந்ததியாரிடம் இருந்தது.

மக்களின் விடுதலைக்காக என்று மட்டுமே சுய நலமின்றி புதிய புலிகள் அமைப்பில்  இணைந்து செயற்பட முன்வந்த சந்ததியார் என்ற போராளி,   கொலைக்கரங்களிலிருந்து விடுதலை பெற்று இந்து மா சமுத்திரத்தின் தென் மூலையைக் கடந்து இருளைக் கிழித்துக்கொண்டு இராணுவ கண்காணிப்பிலிருந்தும் , தப்பியோடும் படகில் மாதகலை வந்தடைகின்றார்

சுந்தரம்

இதே வேளை 1979 ம் ஆண்டு November மாதம்  புளொட் அமைப்பானது , புதிய பாதை சுந்தரம் மற்றும் உமாமகேஸ்வரன் , காக்கா, காத்தான் ,கண்ணன் போன்ற புதிய புலிகளில் செயர்ப்பட்டவர்களால் ஆரம்பிக்கப்படுகின்றது.

புளொட் அமைப்பில் சந்ததியாரும் இணைந்து கொள்கின்றார் அதேவேளை மத்திய குழு உறுப்பினராகவும் தெரிவு செய்யப்படுகின்றார்.

வவுனியாவில் உள்ள கலைவாணி மற்றும் கலைலட்சமி ஸ்ரோஸ் ஆகியவை சுழிபுரத்தை  சேர்ந்த இரத்தினம் மற்றும் துரை என்னும் இரண்டு சகோதரர்களுக்கு சொந்தமானது. .குறித்த சகோதரர்களின் கடையில் வேலை சேர்ந்திருந்த , 17 வயது நிரம்பிய சங்கிலி என்றழைக்கப்படும் கந்தசாமி  இளைஞரை புளொட் அமைப்பில் இணைக்கிறார் சந்ததியார்.

மேலும் வவுனியாவில் காந்தீயத்தின் தலமை செயலகத்திற்கு முன்னால் இருந்த இறைச்சி கடையில் இறைச்சி வாங்க வந்த விமானப்படையினார் மீது மட்டக்களப்பை சேர்ந்த சின்னமுரளி , யக்கடையா என்றழைக்கப்படும் இராமசாமி , நெடுந்தீவு அற்புதம் ஆகியோர் தாக்குதல் நடத்துகிறார்கள்.

மேலும் அமிர்தலிங்கத்தை ,  புதிய பாதை பத்திரிகையில் விமர்சித்த புளொட் போராளி சுந்தரமும் யாழ்ப்பாணத்தில் சித்ரா அச்சகத்தில் வைத்து 02.01.1982 அன்று புலிகளால் சுட்டுக் கொல்லப்டுகிறார். சுந்தரம் சந்ததியாரின் ஊரைச் சேர்ந்தவர் என்பதோடு சந்ததியாரும் சுந்தரமும் 80 களின் ஆரம்பத்தில் சிங்களத்தில் இருந்த மார்க்சிய நூல்களை தமிழில் மொழி பெயர்ப்பதற்காக தம்பையா என்னும் ஆசியரிடம் சென்று ஒன்றாக சிங்களம் கற்றவர்கள் என்பதோடு காந்தியத்திலும் ஒன்றாக செயற்பட்டவர்கள்.

1982ம் ஆண்டு , சுந்தரம் கொலையில் தொடர்படையவர்களாக  கருதப்பட்ட  தமிழ் இளைஞர் பேரவையில் இருந்த முக்கியஸ்தர்களான அளவெட்டியை சேர்ந்த இறைகுமாரன், உமைகுமாரன் ஆகியோரை விசாரிக்க வேண்டி இருந்ததால் , புளொட் முன்னைநாள் கம்யூனிஸ் கட்சியில் இருந்தவரும் பின்னர் செந்தமிழர் இயக்கம் என்ற கட்சியை ஆரம்பித்தவரும் , காலப்போக்கில் புளொட் அமைப்பின் தீவிர ஆதரவாளராகவும் செயற்பட்டு வந்த வி.பொன்னம்பலத்தின் மகனான மகாவலி ராஜன் என்பவர் புளொட் இயக்கத்தின் தள நிர்வாக செயலாளராக செயற்பட்டு வந்தார்.

மகாவலி ராஜன் இறைகுமாரன் உமைகுமாரனை ஒரு வீட்டில் கள்வன் இருப்பதாகவும் அவனை பிடிப்பதற்கு உதவி செய்ய வேண்டும் என கூறி பினாக்காய் வயல் வெளிக்கு அழைத்து வருகிறார். அங்கு  புளொட் இயக்கத்தை சேர்ந்த பாலமோட்டை சிவம் என்னும் பெரிய மென்டிஸ், கந்தசாமி என்றழைக்கப்படும் சங்கிலி ,நெடுந்தீவு அற்புதம் ஆகியோர் காத்திருக்கின்றனர். மேலும் இந்த இடத்தில் வவுனியாவை சேர்ந்த பெரிய செந்திலும் இருத்தாக கூறப்படுகின்றது. ஆனால் அதனை உறுதிப்படுத்த போதுமான ஆதாரங்கள் கிடைக்கவில்லை.

கந்தசாமி (சங்கிலி)

அங்கு உமை குமாரன் இறைகுமாரன் வந்ததும் விசாரணைக்கு முன்னதாக இருவரையும் சுட்டுவிடுகின்றார் சங்கிலி என்ற கந்தசாமி. இச்சம்பவத்தை லண்டனில் வசிக்கும் அற்புதத்தின் நெருங்கிய கனடா வாழ் நண்பர் ஒருவர் ஊடாக உறுதிப்படுத்த கூடியதாக உள்ளது. இக்கொலைக் குற்றச்சாட்டு சந்ததியார் மீது சுமத்தப்பட்டது. இக் குற்றச்சாட்டை முற்றாக நிராகரிக்கின்றார்

சந்தாதியாருக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணான உஷா  என்று அழைக்கப்படும் சறோஜினி  இது தொடர்பில் குறிப்பிடும் பொழுது சந்ததியாருக்கும் இறைகுமாரன் மற்றும் உமைகுமாரன் கொலைக்கு சம்மந்தம் இல்லை என உமா தனது கைப்பட பிரான்ஸ் புளொட்  அமைப்புக்கு எழுதிய கடிதம் ஒன்று தன்னிடம் உள்ளதாகவும் அதன் பிரதியை விரைவில் இந்த கட்டுரை எழுதும் எனக்கு அனுப்பி வைப்பதாகவும் தெரிவித்துள்ளார். அந்தக் கடிதம் கிடைத்தவுடன் இப்பதிவில் கடிதத்தின் பிரதியை வெளியிடப்படும்.

மேலும் இக்கொலைச்சம்பவம் இடம்பெறும் காலத்தில் புளொட் உறுப்பினர் தன்னிச்சையான மரணதண்டனை விதிக்கமுடியாது புளொட்டின் உயர்மட்டத்தில் அனுமதி பெறப்படவேண்டும். இங்கு யார் கந்தசாமிக்கு அதிகாரத்தை வழங்கியது? மேலும் கந்தசாமி தன்னிச்சையாக செயற்பட்டிருப்பின் ஏன் கந்தசாமிக்கு எதிராக நடவேடிக்கைமேற்கொள்ளவில்லை?

உத்தரவு வழங்கிய உயர்மட்ட உறுப்பினர் யார்?

#தொடரும்

Leave A Reply

Your email address will not be published.