புத்தளத்தில் மின்சாரத் தாக்குதலுக்கு இலக்காகி குடும்பஸ்தர் மரணம்!

புத்தளம் மாவட்டம், கருவலகஸ்வெவ, முரியாக்குளம் பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர், மின்சாரத் தாக்குதலுக்கு இலக்காகி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார் என்று கருவலகஸ்வௌ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முரியாக்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான உபுல் நுவான் குமார (வயது 36) என்பவரே இன்று இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

உயிரிழந்த நபரின் பணப்பையிலிருந்த சுமார் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான பணம் மீட்கப்பட்டுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

பிரேத பரிசோதனைக்காக, புத்தளம் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.