திங்கட்கிழமை பதவியேற்கின்றார் வடக்கின் புதிய பிரதம செயலாளர்

வடக்கு மாகாணத்துக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட பிரதம செயலாளர் எதிர்வரும் திங்கட்கிழமையே தனது பதவியைப் பொறுப்பேற்கவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா மாவட்ட அரச அதிபராக இருந்த எஸ்.எம்.சமன் பந்துலசேன வடக்கு மாகாண பிரதம செயலாளராக நேற்று நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் வவுனியா மாவட்டத்தின் பொறுப்புக்களை இதுவரை கையளிக்கவில்லை என்பதால் வவுனியா மாவட்ட அரச அதிபர் பொறுப்பை அங்கு பணியாற்றும் சிரேஷ்ட உத்தியோகத்தரிடம் பதில் கடமையாக நாளை (22) கையளிக்கின்றார்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

அதன்பின்னர் அங்கிருந்து நாளை மாலையே விடை பெற்றுச் செல்கின்றார்.

வவுனியாவில் இருந்து நாளை விடை பெற்றாலும் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை விடுமுறை தினம் என்பதால் எதிர்வரும் திங்கட்கிழமை காலை வடக்கு மாகாண பிரதம செயலாளராக அவர் பதவியேற்கவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.