நடிகை ரோஜாவை பதவியில் இருந்து நீக்கிய ஜெகன்மோகன் ரெட்டி.. 

தமிழ் தெலுங்கு சினிமாவில் 90களில் தவிர்க்க முடியாத நாயகியாக வலம் வந்தவர் நடிகை ரோஜா. அப்போதய நாயகிகளில் கவர்ச்சியின் உச்சம் காட்டியவரும் இவர்தான்.

எப்படியான ரோலுக்கும் எளிதாய் பொறுந்திடும் ரோஜா பல்வேறு இயக்குனர்களால் தேடப்பட்ட ஒரு பொக்கிசம். சினிமாவிற்கு பிறகு இயக்குனர் செல்வமணியை கரம் பிடித்த ரோஜா ஆந்திராவில் பிரபலமான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரசில் இணைந்தார்.

ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சியில் அமைச்ஞசர் பதவி கிடைக்கும் என உறுதியாக இருந்தார். ஆனால் சாதி இட ஒதுக்கீடுகள் காரணமாக ரோஜாவுக்கு வாய்ப்பளிக்க முடியாமல் போனது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இதனால் அதிருப்தியாக இருந்த ரோஜா தரப்பினருக்கு உரிய விளக்கத்தை தந்து மேலும் “ஆந்திர தொழிற்சாலை உட்கட்டமைப்பு வாரிய” தலைவராக ரோஜாவை நியமித்திருந்தார் ஜெகன் மோகன்.

வாக்குறுதியில் கொடுத்தாற் போல இரண்டரை ஆண்டுகளில் அமைச்சரவையை மாற்றியமைக்க திட்டமிட்டுள்ளார் ஜெகன். எனவே சட்டமன்ற உறுப்பினர் ரோஜா இருந்த தொழிற்சாலை உட்கட்டமைப்பு வாரிய தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.